Pages

Thursday, March 26, 2015

முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்

சென்ற 24.03.2015 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான நடைபெற்ற கூட்டத்தில் ஜம்இய்யாவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.சீ.அகார் முஹம்மத் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.

இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வரலாறு நெடுகிலும், எமது
தாய் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் அதன்
இறைமையைக் காப்பதற்காகவும் நாட்டின் ஏனைய தலைவர்களுடன்
இணைந்து தமது மகத்தான பங்களிப்பை செய்து வந்துள்ளதோடு, நாட்டின்
வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்கேற்றுள்ளனர்
என்பதை இங்கு பெருமிதத்துடன் நினைவுகூர விரும்புகின்றோம்.