Pages

Thursday, March 26, 2015

முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்

சென்ற 24.03.2015 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான நடைபெற்ற கூட்டத்தில் ஜம்இய்யாவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.சீ.அகார் முஹம்மத் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.

இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வரலாறு நெடுகிலும், எமது
தாய் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் அதன்
இறைமையைக் காப்பதற்காகவும் நாட்டின் ஏனைய தலைவர்களுடன்
இணைந்து தமது மகத்தான பங்களிப்பை செய்து வந்துள்ளதோடு, நாட்டின்
வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்கேற்றுள்ளனர்
என்பதை இங்கு பெருமிதத்துடன் நினைவுகூர விரும்புகின்றோம்.

அவ்வாறே முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும்
அதன் முன்னேற்றத்துக்காகவும் எமது முன்னைய முஸ்லிம் அரசியல்
தலைவர்கள் செய்த மகத்தான சேவைகளையும் இங்கு நன்றியுடன்
நினைவுபடுத்துகின்றோம். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ரஹ்மத்
செய்வானாகளூ அவர்களின் குற்றங்குறைகளை மன்னித்து உயர் சுவன
பதவியை வழங்கியருள்வானாக!
மேலும், எமது சமகால முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பணிகளையும்
பங்களிப்புக்களையும் இங்கு நாம் பாராட்டாமலிருக்க முடியாது. எல்லாம்
வல்ல அல்லாஹுத்தஆலா, நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் அவர்கள்
தியாகத்துடனும் அர்ப்பணத்துடனும் செய்துவரும் நற்பணிகளை
அங்கீகரித்து, அவர்களுக்கு நல்லருள்பாலிக்க வேண்டும் எனவும்
பிரார்த்திக்கிறோம்.
எமது தாய்நாடான இலங்கை மண்ணில் நல்லாட்சி மலர வேண்டும்ளூ எல்லா
சமூகங்களும் சமயத்தவர்களும் நல்லிணக்கத்தோடும் ஐக்கியமாகவும்
ஒற்றுமையாகவும் வாழ வேண்டும்ளூ நாடு சகல துறைகளிலும்
வளர்ச்சிகண்டு முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே
எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும்.
அத்தோடு நல்லாட்சியுடன் கூடிய சுபீட்சமிக்க ஒரு நாட்டைக்
கட்டியெழுப்புவதில், முஸ்லிம் அரசியல் வாதிகள் முன்னணியில் நின்று
உழைக்கும் முன்னோடிகளாக மற்றும் நல்லாட்சிக்கான சிறந்த
எடுத்துக்காட்டுக்களாக திகழ வேண்டும் என்பதும் எமது அவாவாகும்.
மேலும், முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆட்சியில் வெறும்
பங்காளிகளாக செயற்படுவது மாத்திரமன்றி, முற்போக்கான
மாற்றங்களுக்காகத் துணிச்சலுடனும் அர்ப்பணத்துடனும் உழைக்கின்ற
போராளிகளாகவும் விளங்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
நல்லாட்சியுடன் கூடிய ஓர் ஆரோக்கியமான புதிய அரசியல் கலாசாரத்தை
உருவாக்கும் இலட்சியப் பயணத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும்
கைகோர்க்க வேண்டும் என்பதையும், இவ்விடயத்தில் அனைவருக்கும்
சிறந்த முன்மாதிரிகளாக அவர்கள் திகழ வேண்டும் என்பதையும் நாம்
இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.
இந்தவகையில், நல்லாட்சிக்கும் நல்லாட்சியாளர்களுக்குமான
தன்மைகளையும் தகுதிகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகள்
பெற்றிருப்பதானது இன்றி;யமையாததாகும். குறிப்பாக, கிடைத்துள்ள
பாராளுமன்ற உறுப்புரிமையையும் அமைச்சுக்களையும் பதவிகளாக
மாத்திரமல்லாமல், பதில் சொல்ல வேண்டியதும் வகைகூற
வேண்டியதுமான பெரும் பொறுப்புக்களாகவும் சுமைகளாகவும் பார்க்கும்
மனப்பாங்கை அவர்கள் தம்மிடையே வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.
'பதவி என்பது ஓர் அமானிதமாகும். தகுதியுள்ளவரே அதை சுமந்து
அதற்குரிய கடமையை நிறைவேற்றல் வேண்டும். இல்லாதவிடத்து,
மறுமையில் அப்பதவியானது ஒருவருக்கு இழிவையும் கைசேதத்தையுமே
ஏற்படுத்தும்' எனும் நபிமொழியை நினைவில் கொண்டு தமது
செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும்.
புராத் (இயுப்ரிட்டீஸ்) நதியோரத்தில் கவனிப்பாரற்று ஒரு ஒட்டகம்
மரணித்தாலும் அதுபற்றி அல்லாஹ் என்னிடத்தில் கேட்பான் என
பயப்படுகிறேன் என்று கூறிய உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் போன்ற
நல்லாட்சியாளர்கள் இந்தவகையில் நமக்கான சிறந்த முன்மாதிரிகளாக
இருக்கின்றனர்.
'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புக்குரியவர்கள். உங்களது பொறுப்பின்
கீழுள்ளவர்கள் பற்றி நீங்கள் பதில்கூற வேண்டும். ஒரு தலைவர்
பொறுப்புள்ளவராவார். அவரின் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவர்
வகைகூறல் வேண்டும்...' (ஸஹீஹுல் புஹாரி) என்ற நபிமொழியும் எமது
கவனயீர்ப்பைப் பெற வேண்டியதாகும்.
பதவிகளுக்கு வருபவர்கள், நல்லவர்களாகவும் நம்பிக்கை, நாணயம்
மற்றும் பொறுப்புணர்ச்சியுடையோராகவும் இருக்க வேண்டுமென்பது
போலவே, அவர்கள் ஆற்றல்களையும் திறமைகளையும் ஒருசேரப் பெற்ற
தமது துறைக்குத் தேவையான தகுதியைப் பெற்றவர்களாவும் இருத்தல்
வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எகிப்து நாட்டின்
நிதித்துறையை பொறுப்பேற்க விரும்பிய நபி யூஸுப் (அலை) அவர்கள்,
தனக்குரிய இருபெரும் தகைமைகளை ஆட்சியாளரிடம் போய்க்
குறிப்பிட்டதை புனித அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
1 2'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புக்குரியவர்கள். உங்களது பொறுப்பின்
கீழுள்ளவர்கள் பற்றி நீங்கள் பதில்கூற வேண்டும். ஒரு தலைவர்
பொறுப்புள்ளவராவார். அவரின் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவர்
வகைகூறல் வேண்டும்...' (ஸஹீஹுல் புஹாரி) என்ற நபிமொழியும் எமது
கவனயீர்ப்பைப் பெற வேண்டியதாகும்.
பதவிகளுக்கு வருபவர்கள், நல்லவர்களாகவும் நம்பிக்கை, நாணயம்
மற்றும் பொறுப்புணர்ச்சியுடையோராகவும் இருக்க வேண்டுமென்பது
போலவே, அவர்கள் ஆற்றல்களையும் திறமைகளையும் ஒருசேரப் பெற்ற
தமது துறைக்குத் தேவையான தகுதியைப் பெற்றவர்களாவும் இருத்தல்
வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எகிப்து நாட்டின்
நிதித்துறையை பொறுப்பேற்க விரும்பிய நபி யூஸுப் (அலை) அவர்கள்,
தனக்குரிய இருபெரும் தகைமைகளை ஆட்சியாளரிடம் போய்க்
குறிப்பிட்டதை புனித அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
'(இந்தப்)பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்)
நியமிப்பீராக! நிச்சயமாக நான் பாதுகாக்கக் கூடியவனாகவும்
நன்கறிந்தவனாகவும் இருக்கின்றேன் என (யூஸுப்) கூறினார்' (12:55)
அவ்வாறே, பதவிகளை பொறுப்பாகக் கருதி பொறுப்புணர்ச்சியோடு
நடந் து கொ ள ; ள hத நி i ல தோ ன ;றுவ i த உலகமுடிவி ன ;
அடையாளங்களில் ஒன்றாக இஸ்லாம் கூறுகின்றது.
ஒரு நாள் ஒரு மனிதர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்து, 'யுகமுடிவு
எப்போது தோன்றும்?' என வினவினார். அதற்கு நபியவர்கள், 'அமானிதம்
பாழ்படுத்தப்பட்டால் யுகமுடிவை எதிர்பாருங்கள்' என்றார்கள். அதற்கவர்,
'அதனைப் பாழ்படுத்துவதென்றால் என்ன?' என வினவியபோது, 'ஒரு
பதவி அதனைப் பெறத் தகுதியற்றவருக்கு வழங்கப்பட்டால் யுகமுடிவை
எதிர்பார்ப்பீராக!' என்று நபியவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி)
சமூகத்தலைவர்களிடம் இருக்க வேண்டிய அமானிதம் பேணல் என்ற
முக்கியத்துவம் வாய்ந்த பண்பைப் போலவே, அவர்களிடம் காணப்பட
வேண்டிய மற்றும் பல அடிப்படையான பண்புகளை இஸ்லாமியப்
போதனைகளில் காணமுடிகின்றது. எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள்
கவனத்திற்கொண்டு கருமமாற்ற வேண்டிய அத்தகைய பண்புகளில்
முக்கியமானவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.
1.எமது செயல்களின் பெறுமானம், - அரசியல் செயற்பாடுகள்
உட்பட - அவற்றை எந்தளவு தூரம் தூய்மையுடன் இறை
திருப்தியை நாடி செய்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது.
இந்தவகையில், எமது அரசியல் பயணத்தில் பெயர், புகழ்,
பிரபல்யம், பதவி, உலக சுகபோகங்கள் முதலான
உ ள த ; து } ய ; i ம க ; கு ப h த p ப ; i ப ஏ ற ; ப டு த ; து ம ;
எதிர்பார்ப்புக்களிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வின் திருப்தியை
மாத்திரம் எதிர்பார்த்த நிலையில் எமது செயற்பாடுகளை
அமைத்துக்கொள்ள முழுமுயற்சி செய்தல் வேண்டும். அப்போதே
எமது அரசியல் சார்ந்த செயற்பாடுகள் கூட நன்மை பெற்றுத்தரும்
அமல்களின் பட்டியலில் சேரும்.
2. தனது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக, அரசியல்
வாழ்க்கையிலும் இஸ்லாம் கூறும் ஹலால் - ஹராம்
வ i ர ய i ற க i ள ப ; N பணுவ த p ல ; அ ர ச p ய ல ; வ h த p க ள ;
விழிப்போடிருத்தல் வேண்டும்.
3. அரசியல் வாதிகள் மறுமை வாழ்வைப் பாதிக்காத வகையில் தமது
அரசியல் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள முயற்சிப்பதை
விட, சிறந்த முன்மாதிரியான அரசியல் செயற்பாடுகளுக்கூடாக
சுவனம் செல்லும் பாக்கியத்தைப் பெற முயற்சி செய்தல் வேண்டும்.
4. தங்களது மெச்சத்தக்க நிலைப்பாடுகளாலும் செயற்பாடுகளாலும்,
இஸ்லாத்தி ற ; கு ம் அ த ன ; உய ர ; மாண் புகளுக் கு ம்
விழுமியங்களுக்கும், சாட்சி பகர்பவர்களாக முஸ்லிம் அரசியல்
தலைமைகள் விளங்க வேண்டும். அதுவும் இலங்கை போன்ற,
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் பண்பாடுகள்
மூலம் அல்லாஹ்வின் தீனுக்கு சான்றுபகர்வது மிகவும் தாக்கமிக்க
ஒரு தஃவா வழிமுறையாக இருக்குமென நாம் நம்புகின்றோம்.
5. எப்போதும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் நீதியைக்
க i ட ப ; ப p டி த ; து , N ந ர ; i ம ய h க வு ம ; ந p ய h ய ம h க வு ம ;
நடந்துகொள்வதோடு பக்கச்சார்பாக நடத்தல், அதிகாரத்
துஷ்பிரயோகத்தில் ஈடுபடல், சுய விருப்பு வெறுப்புக்களுக்கு
இடமளித்தல் முதலான மனிதப் பலவீனங்களிலிருந்தும்
பாவங்களிலிருந்தும் விடுபடுவதற்கு முழு அளவில் முயற்சித்தல்
வேண்டும். எந்நிலையிலும் எமது நடவடிக்கைகள், செயற்பாடுகள்,
நிலைப்பாடுகள், முடிவுகள் போன்றன தனிமனிதர்களுக்கோ,
குழுக்களுக்கோ அல்லது பிற இனங்களுக்கோ அநீதியிழைக்கும்
வகையில் அமைந்துவிடாமலிருப்பதை உத்தரவாதப்படுத்துவது
அவசியமாகும்.
3 4'ஈமான் கொண்டவர்களே! நீதியை நிலைநாட்டும் விடயத்தில்
அல்லாஹ்வுக்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு
கூட்டத்தார் மீது உங்களுக்குள்ள வெறுப்பானது, நீங்கள்
அவர்களோடு நீதியாக நடக்காமலிருக்க (உங்களைத்)
தூண்டாதிருக்கட்டும். நீதியாக நடந்து கொள்ளுங்கள். அதுவே
தக்வாவுக்கு மிக நெருக்கமானதாகும்...' (5:8)
6. அரசியல், சமூகத் தலைமைகள் முடியுமானவரை, தமது தனிப்பட்ட
வாழ்விலும் பொது வாழ்விலும் பகட்டையும் படாடோபத்தையும்
ஆடம்பரத்தையும் தவிர்த்து, எளிமையைக் கடைப்பிடித்தல்
வேண்டும்.
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அரச குடும்பத்தில்
பிறந்து வளர்ந்தவர்கள். தனது இளமைக்காலத்தில் அரச
சுகபோகத்தை அனுபவித்தவர்கள். ஆயினும், ஆட்சிப் பொறுப்பை
ஏற்றதைத் தொடர்ந்து தனது சொத்துக்களையெல்லாம் பைத்துல்
மாலில் ஒப்படைத்தது மாத்திரமன்றி மிக எளிமையாக தனது
வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். இவர்களின் வாழ்வு
இன்றைய அரசியல் தலைமைகளுக்கு ஒரு சிறந்த
முன்மாதிரியாகும்.
7. 'சமூகத்தி;ன் தலைவன் அச்சமூகத்தின் சேவகன்' என்ற
உண்i மi ய உணர ;ந் து மக்க ள ; ப p ரதிநிதிக ள h ன
அரசியல்வாதிகள் மக்கள் சேவைக்காகத் தம்மை முழுமையாக
அர்ப்பணித்துக்கொள்ளல் வேண்டும்.
8. இலங்கை ஒரு பல்லின, பல்சமய நாடு என்ற வகையில், இன - மத
பாகுபாடு காட்டாது எல்லா மக்களுக்கும் பாரபட்சமின்றி
பணிபுரிபவர்களாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் திகழ
வேண்டும்.
இஸ்லாம் ; இனம், பிரதேசம், மொழி முதலான
வாதங்களுக்கு இடமளிப்பதில்லை என்ற ரீதியில், இனவாத
அரசியலை தவிர்ப்பவர்களாகவும் இனவாதம் எவ்வுருவில்
வெளிப்பட்டாலும் அதற்கெதிராகப் போராடுபவர்களாகவும்
சமூகத்தளத்தில் மிளிர்வதனூடாக, மேற்கூறிய அனைத்து விதமான
பிரிவினைகளையும் தாண்டி மனிதாபிமானமும் மனித நேயமும்
முக்கியத்துவம் பெறுக்கூடிய ஓர் அரசியல் கலாசாரத்தைக்
கட்டியெழுப்ப முஸ்லிம் தலைமைகள் பாடுபட வேண்டும்.
'
9. ஒரு சமூகத் தலைவன் தன்னை ஒரு தந்தை என்ற அந்தஸ்திலும்
மக்களைத் தன் சொந்தப் பிள்ளைகள் என்ற தரத்திலும் வைத்து
நோக்குபவராக இருத்தல் வேண்டும்' என்ற நபியவர்களது
வழிகாட்டலினடிப்படையில், தனிப்பட்ட, சொந்த நலன்களை விட
நாட்டு நலனிற்கும் சமூக நலனிற்கும் முக்கியத்துவமும்
முன்னுரிமையும் வழங்கக்கூடியவர்களாக முஸ்லிம் தலைமைகள்
மாற வேண்டும்.
ஒரு சமூகத்தலைவர் என்றவகையில் மக்கள் விவகாரங்களில்
நபியவர்களுக்கிருந்த கரிசனையையும் அக்கறையையும்
ஈடுபாட்டையும் புனித அல்குர்ஆன் பின்வருமாறு வர்ணிக்கின்றது.
'நிச்சயமாக, உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம்
வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்துக்குள்ளாகிவி;ட்டால் அது
அவருக்கு பெரும் வருத்தத்தைக் கொடுக்கின்றது. மேலும், அவர்
உ ங ; க ள p ல ; ( உ ங ; க ள ; வ p வ க h ர ங ; க ள p ல ; ) அ த p க
கரிசனையுடையவராகவும் இருக்கிறார். அன்றி, முஃமின்கள் மீது
மிகவும் கருணையும் அன்பும் கொண்டவராகவும் அவர்
இருக்கின்றார்' (9:128)
10. ஆன்மீக, தார்மீக, ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதில் அரசியல்
தலைமைகள் மிகக் கண்டிப்பாக நடந்துகொள்ளல் வேண்டும்.
சமூகத் தலைமைகள் என்றவகையில் அரசியல்வாதிகள், நாட்டு
மக்களுக்கு மிகவும் முன்மாதிரியானவர்களாக விளங்க
வேண்டுமென்பது இத்துறை சார்ந்த இஸ்லாமியப் போதனைகளின்
அடிநாதமாகும். மக்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும்
அபிமானத்தையும் பெற்றவர்களாக அவர்கள் இருப்பதில் தான்
நல்லாட்சியின் வெற்றியும் குடிமக்களின் சுபீட்சமும் தங்கியுள்ளது.
11. அவ்வப்போது ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும்
வழங்குகின்ற துறைசாரந்த நிபுணர்களின் உறவு அரசியல்
தலைமைகளுக்கு இன்றியமையாததாகும். எவ்வளவு தான் அறிவும்
ஆற்றலும் படைத்தவராக ஓர் அரசியல்வாதி இருந்தாலும்
கலந்தாலோசனையின்றி முடிவுகளையோ நிலைப்பாடுகளையோ
அவர் எடுப்பது ஆரோக்கியமானதல்ல.
' ந ப p ய வ ர ; க i ள ப ; N ப h ல த ன து N த h ழ ர ; க N ள h டு
க ல ந ; த h N ல h ச i ன ய p ல ; ஈ டு ப ட ; ட ம ற ; n ற h ரு வ i ர க ;
காணமுடியவில்லை' என நபித்தோழர்கள் கூறுகின்றனர். (திர்மிதி)
'நபியே! அவர்களோடு நீங்கள் (ஒவ்வொரு) விடயத்திலும்
கலந்தாலோசிப்பீராக!' (3:159) என அல்குர்ஆனும்,
க ல ந ; த h N ல h ச i ன n ச ய ; யு ம ; ப டி ந ப p ய வ ர ; க i ள
வலியுறுத்தியுள்ளது.
5 6தனது தூதரே கலந்தாலோசனை செய்ய வேண்டுமென அல்லாஹ்
கட்டளையிடுகின்றான். எந்தவொரு ஆட்சியாளருக்கோ அரசியல்
தலைமைகளுக்கோ இதில் விதிவிலக்கு இருக்க முடியாது என்ற
உண்மை ஆழமாக உணரப்படல் வேண்டும். இந்தவகையில்,
இறையச்சமும் நன்னடத்தையும் துறைசார் அறிவும் ஆற்றலும்
கொண்ட நிபுணர்களையும் புத்திஜீவிகளையும் அவர்கள் தமது
ஆலோசகர்களாகத் தெரிவுசெய்தல் வேண்டும்.
12. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்களின் உயிரிலும்
மேலானது அவர்கள் நம்பிப் பின்பற்றும் மார்க்கமாகும்.
இந்தவகையில், அரசியல் தலைமைகள் எந்நிலையிலும் மார்க்க
விவகாரங்களில் வீணான அரசியல் தலையீடுகளையும்
அழுத்தங்களையும் மேற்கொள்வதைத் தவிர்ந்துகொள்ளல்
வேண்டும். மேலும், மார்க்கத்தின் பாதுகாப்பையும் நலனையும்
எப்போதும் முன்னிறுத்திச் செயற்படும் தார்மீகக் கடப்பாடும்
தமக்குண்டு என்பதை அவர்கள் மனதிற்கொள்வது அவசியமாகும்.
13. அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் மோசடியில்
ஈடுபடுதல், முறைகேடாக உழைத்தல், சட்டத்துக்கு முரணான
செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றன மார்க்க விரோத செயல்கள்
என்றவகையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இவ்விடயத்தில்
மிகவும் விழிப்புடனும் தூய்மையாகவும் பேணுதலாகவும்
நடந்துகொள்ளல் வேண்டும். இவ்விடயத்தில் பிறர் உதாரணமாக
சொல்லுமளவிற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள்
முன்மாதிரிகளாக விளங்க முயற்சித்தல் வேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அதன் சட்டயாப்பின் படி அரசியல்
சார்பற்ற ஒரு தொண்டு நிறுவனமாகும். அந்தவகையில் அது,
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்சி அரசியலில் ஈடுபட
மாட்டாது. ஆயினும் நாட்டின் நலனையும் சமூகத்தின் நலனையும்
கவனத்திற்கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஃபத்வா,
சமூக ஒற்றுமை, சகவாழ்வு, கல்வி, சமூக சேவை, பிரசாரம், வெளியீடு,
மக்தப், ஹிலால் பைதுஸ் ஸகாத், மகளிர் விவகாரம், ஆலிம்கள்
விவகாரம், போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில்
வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிவருவதுபோன்று
அரசியல் துறைக்குத் தேவையான ஆலோசனைகளையும்
வழிகாட்டல்களையும் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரிற்கும்
வழங்குகின்ற தார்மீகக் கடப்பாடு தமக்குண்டென ஜம்இய்யா நம்புகின்றது.
இந்தவகையில், ஜம்இய்யாவை அணுகும் அரசியல் கட்சிகளுக்கும்
அரசியல் தலைமைகளுக்கும் அது தேவையான வழிகாட்டல்களை
வழங்கப் பின்னிற்காது. மேலும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அரசியல்
கட்சிகளையும் அதன் தலைமைகளையும் அங்கத்தவர்களையும் அழைத்து
அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் அது வழங்கும்
என்பதையும் இங்கு ஈண்டு குறிப்பிட விரும்புகின்றோம்.
இறுதியாக, அரசியல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல்
உலமாவின் நிலைப்பாட்டை நாட்டுமக்களுக்குப் பொதுவாகவும் நாட்டின்
அரசியல் கட்சிகளுக்குக் குறிப்பாகவும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு
சிறப்பாகவும் விளக்க விரும்புகின்றோம்.
அத்துடன் எந்நிலையிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்
பெயரை அரசியலுக்காக எந்தவொருவரும் பயன்படுத்தாமல் இருப்பதை
தாங்கள் யாவரும் உத்தரவாதப்படுத்துமாறும் மிக விநயமாய்
வேண்டிக்கொள்கிறோம்.
அல்லாஹுதஆலா நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!

ஆமீன்..

No comments:

Post a Comment