மத்திய மாகாண சிறந்த தொழில் முனைவோர்களுக்கு அங்கீகரிக்கும் ஸ்டார் விருது விழா கண்டி ஓக் ரே ஹோட்டல் இல் கடந்த 29.11.2016 அன்று நடைப்பெற்றது இவ்விழாவில் கம்பளை ZAM ZAM பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் இவ்வாண்டுக்கான சிறிய அளவிலான உற்பத்தி துறை வகையில் மூன்று நட்சத்திர விருதினை பெற்றுக் கொண்டது. அதனை நிறுவனத்தின் உரிமையாளர் சம்சுதீன் முகமட் சலீம் பெற்றுக்கொண்டார்.
2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்நிறுவனம் தற்போது 5 வகையான உற்பத்பத்திப் பொருட்களுடன் யோகட், ஜெலி யோகட், யோகட் பாணம், தயிர், ஐஸ் பக்கெட் என பல தயாரிப்புக்களுடன் மத்திய மாகாணத்தில் ஓர் சிறந்த பால் உற்பத்தி நிறுவனமாக வளர்ந்து வருகின்றமை குறிப்பிடட்தக்கது. மேலும் ஹலாலான மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் இவ்வுற்பத்திப் பொருட்களுக்கு HAC நிறுவனத்தினால் ஹலால் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்;நிறுவனம் கடந்த 2014/2015 ஆம் ஆண்டுகளிலும் நட்சத்திர விருதினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment