Pages

Wednesday, December 14, 2016

ACJU அவகாசம் கேட்டதால் சலீம் மர்சூபின் அறிக்கை மீண்டும் தாமதம்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் உயர் நீதி­மன்ற  முன்னாள் நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான குழு மேற் கொண்­டுள்ள சிபா­ரி­சு­களை மேலும் ஆராய்­வ­தற்கு உலமா சபை கால அவ­காசம் கோரி­யதால் சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்­பான இறு­தி­ய­றிக்கை எதிர்­வரும் ஜன­வரி 29 ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக குழுவின் தலைவர் உயர் நீதி­மன்ற முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்துள்ளார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­யரசர் சலீம் மர்­சூபின் தலைமையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது.
இக்­குழு நேற்று 13 ஆம் திகதி தனது அறிக்­கையை பூர­ணப்­ப­டுத்த திட்­ட­மிட்­டி­ருந்­தது. அறிக்­கையில் குழு அங்­கத்­த­வர்­க­ளி­னது கையொப்­பங்­க­ளையும் பெற்றுக் கொள்­ள­வி­ருந்­தது.
நேற்­றைய கூட்­டத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்­தியும் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபா­ரக்கும் கலந்து கொள்­ள­வில்லை.
தலைவர் ரிஸ்வி முப்தி வைத்­திய சிகிச்­சைக்­காக கனடா சென்­றி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­துடன்  சட்­டத்­தி­ருத்­தங்­களை மேலும் ஆராய்­வ­தற்கு உலமா சபை கால அவ­காசமும் கோரி­யி­ருந்­தது. இதற்­க­மை­வா­கவே இறு­தி­ய­றிக்கை எதிர்­வ-ரும் ஜன­வரி 29 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.
குறிப்­பிட்ட அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி பூர­ணப்­ப­டுத்­தப்­பட இருந்­தாலும் கண்டி போரம், நளீ­மியா கலா­பீட பட்­ட­தா­ரிகள், பல்­க­லைக்­க­ழக முன்னாள் வேந்தர் ஹுசைன் இஸ்மாயில் ஆகியோர் சில திருத்தங்களை முன்வைத்ததனாலேயே சிபாரிசுகளை பூர்த்தி செய்யும் காலம் நேற்றைய தினத்திற்கு (13) ஒத்திவைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
நன்றி: விடிவெள்ளி

No comments:

Post a Comment