பாஸ்தானின் பிரபல பாடகர் Junaid Jamshed. இசையும்,கூத்தும்,குடியும், கும்மாலமும்,ஆட்டமும் என தனது வாழ்கையை ஓட்டியவர். உலகெங்கும் உள்ள உருது மொழிபேசும் இடமெல்லாம் சென்று ஆடிப்பாடி அனைவரையும் மகிழ்வித்து உலக இன்பங்களில் மூழ்கி இருந்தவர். ஆனாலும் அவரது மணவாழ்கையில் சந்தோஷம் இருக்கவில்லை. எப்போது பார்தாலும் மனைவியுடன் கருத்துவேற்றுமை,சண்டை சச்சரவு....ஒருநாள்...மனைவியுடன் சண்டையிட்டுகொண்டு வீட்டில் இருந்து கிழம்புகிறார்.... பொடி நடையாக.....எதிரே உள்ள மஸ்ஜிதில் இமாம் Maulana Tariq Jameel செய்யும் பயான் காதில் விழுகிறது.... "உங்கள் மனைவியர்களுடன் கருத்து வேற்றுமை இல்லாமல் இருக்க...ஒன்றாக ஒரே பாத்திரத்தில் உணவருந்துங்கள். ஒருவருக்கொருவர் அடிக்கடி ஊட்டி விடுங்கள். இந்தக்காரியத்தை நீங்கள் தொடராக செய்வீர்கள் எனில் உங்களிருவரிடையே உள்ள வேற்றுமைகள் நீங்கும். அன்பு பெருகும். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசம்கொள்ள ஆரம்பிப்பீர்கள்." இதனை தன்காதால் செவியுற்ற Junaid Jamshed... மீண்டும் வீடு திரும்புகிறார். மனைவியை சாப்பிட வருமாறு அழைக்கிறார். என்றும் இல்லாத இந்த புதினமான அழைப்பைக் கண்டு மனைவி திகைக்கிறார். சந்தோஷமாக உணவுகளை எடுத்துவைக்கிறார். ஆளுக்கொரு தட்டை அவர் எடுத்துவைக்க....இவரோ ஒருதட்டை கவிழ்த்து வைத்துவிட்டு மறுதட்டில் மட்டும் இருவருக்கான உணவை எடுத்துகொண்டு "நாம் இன்று ஒரு தட்டில் சாப்பிடுவோம்"எங்கிறார்....மனைவியும் சம்மதிக்க.. இருவரும்....சாப்பிடுகிறனர். இந்த செயல் சில நாள் தொடர்கிறது. வீட்டில் சண்டை சச்சரவுகள் ஒழிந்து அமைதி நிலவ ஆரம்பிக்கிறது. இருவரிடையே அன்பு பெருக ஆரம்பிக்கிறது. இந்த ஒரு செயலே இவ்வளவு மாற்றத்தை தந்தால் இஸ்லாத்தை நான் கடைப்பிடித்தால் எவ்வளவு நலவுகள் உருவாகும் என அவா கொள்கிறார்.தான் செவியுற்ற பயானின் சொந்தக்காரரிடம் சென்று விடையத்தை கூறிட அவரும் Maulana Tariq Jameel ஆலோசனை செய்கிறார் .காலமும் நேரமும் தீனுக்காக செலவாகிட அவர் இசையை வெறுக்கிறார். தான் தன் தொழிலை விடப்போவதாக ஆலோசனை கேட்கிறார். ஆனால் தொழிலை விடாமல் தீனுடைய நலவுக்காக அந்தத்தொழிலை பயன்படுத்துமாறு ஆலோசனை கொடுக்கப்படுகிறது. பின்னர் துன்யாவை,மதுவை,மாதுவை புகழ்ந்து பாடிய அதே குரல் தீனை,படைத்தவனை,அவன் நிஃமத்களை,அவனது தூதர்களை புகழ்ந்துபாடும் குரலாக மாறுகிறது.தீனையும் முழுமையாக அவர் படித்து முடித்தார். உலகெங்கும் சென்று பல்லாயிரக்கணக்கன இளைஞர்களை தீன் பக்கம் திருப்ப கலிமாவை மொழியவைக்க...தீனுல் இஸ்லாத்தில் நுழையவைக்க தன் ஆயுள் முழுக்க செலவிட்டு நேற்று(7.12.2016) அன்று திடீர் விபத்தின் மூலம் ஷஹீதானார், அல்லாஹ்விடமே திரும்பி இருக்கிறார். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர் வழிகாட்டுகிறான்??? அந்த நேர்வழியின்பால் செலுத்தவைத்து அவர்களை இறுதிவரை தீனிலே இஸ்திகாமத்தாக வைத்திருந்து தான் விரும்பிய நேரத்தில் அழைத்தும் கொள்கிறான். மிக்க மேலானவன் அவரை பொருந்திக்கொள்வானாக. அவரது நற்பணிகளுக்கு மிக்க மேலான சன்மானங்களை பரிசளித்து தன் ரஹ்மத்தின் நிழலை கொடுத்தருள்வானாக.
No comments:
Post a Comment