சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு புனிதஸ்தலங்களின் சேவகரான அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு சூஊதின் விருந்தினர்களாக 2015ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு 20 இலங்கையர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பயணத்திற்கான பயணச்சீட்டுக்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொறுப்பதிகாரி மம்துஹ் முஹம்மது அலி அல்லாப் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.