Pages

Monday, September 7, 2015

ACJU - Mslim MPs சந்திப்பின் போது அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை - அஷ்-ஷைக் எம்.மfபாஹிம்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து 2015 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வரவேற்பொன்றை 01.09.2015 செவ்வாய்க் கிழமை ஜம்இய்யாவின் தலைமையகத்தில நடாத்தியது. அந்நிகழ்ச்சியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.
தொகுப்பு: அஷ்-ஷைக் எம்.மபாஹிம்

அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளன் அவன் பெயரால்...
இந்த நிகழ்வுக்கு தலைமைதாங்கும் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்- ஷைக் ரிழ்வி முப்தி அவர்களேஅன்பின் உலமாக்களே முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளே எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளமுஸ்லிம் சகோதரர்களே மற்றும் சபையோர்களே!



உங்கள் எல்லோரையும் இந்த மாலைப்பொழுதில் சந்திப்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், இங்கு வருகை தந்துள்ள முஸலிம் இயக்கங்கள்,நிறுவனங்கள் அனைத்தும் மகிழ்ச்சி அடைகின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் அனைவரது எண்ணங்களையும் தூய்மையானதாக ஆக்கி அவனது திருப்திக்குரிய வழியில் எம்மைச் சேர்த்தருள்வானாக. 

இங்கு நாங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த பழைய உறுப்பினர்கள் சிலரையும் பாராளுமன்றம் செல்லும் புதிய உறுப்பினர்கள் பலரையும் சந்திக்கின்றோம். எனவே எமது அழைப்பை மதித்து வேலைப்பளுக்கள் நிறைந்த இன்று வருகை தந்தது ஒரு வரலாற்று நிகழ்வாகும். உங்கள் எல்லோரையும் மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம் உங்கள் வருகை நல்வரவாகட்டும்.

கௌரவத்துக்குரியவர்களே!
நீங்கள் பல்வேறு கட்சிகளிலிருந்தும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளீர்கள். சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு போட்டியிட்டீர்கள். நீங்கள் எந்தக் கட்சியை சேர்ந்தாலும் உங்களது ஆதரவாளர்கள் தொழுதும், நோன்பு நோற்றும், துஆவில் ஈடுபட்டுக்கொண்டுமிருந்தனர். எமக்கு சேவை செய்யக்கூடிய எமது சமுகத்திற்கு பிரயோசனமானவர்களை எமக்குத் தருவாயாக என்று பிரார்த்தித்தார்கள்.

இந்த நிலையில் நீங்கள் உங்கள் பிரதேச முஸ்லிம் முஸ்லிம் அல்லாத மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொண்ட பிரதிநிதித்தவம் உங்களுக்கு கிடைத்துள்ள பாக்கியமும் அமானிதமுமாகும். அதனைப் பேணி நடந்து கொள்வதும் அதன் மூலம் நிறைவேற்றப்படவேண்டியவைகளுமே உங்களுக்கு நற்கூலி தரும்.

நீங்கள் செல்லும் பாராளுமன்றத்திற்கு, முன்னரும் பல முஸ்லிம்கள் சென்றனர். பெரும் பெரும் அமைச்சுப்பதவிகளை வகித்துவந்ததோடு முஸ்லிம் சமூகம் மாத்திரமின்றி ஏனைய சமூகத்தவரும் அவர்களைப் பாராட்டிய வண்ணம் நடந்து கொண்டார்கள். அவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் மதிப்பைப் பெற்றுத்தந்தனர். அதேபோன்று அல்லது அதைவிடவும் சிறந்த பெயரையும் புகழையும் இச்சமூகத்திற்கு நீங்கள் தேடித்தருவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். 

கடந்த கால பாராளுமன்ற வரலாற்றிலே சபாநாயகர்கள் வெளிநாட்டமைச்சர்கள் கல்வி, தொழில், வானிபம் சமயம் போன்றவற்றிற்காக பல அமைச்சர்கள் பதவி வகித்தது மட்டுமன்றி சகல சமூகங்களையும் கவனித்தனர். சமூகப்பிரச்சினைகள் ஏற்படும் போது ஒன்றுகூடிப்பேசி நடவடிக்கைகள் மேற்கொண்டனர். 
நமது பாராளுமன்றத்தை கீழ்க்காணும் உறுப்பினர்கள் அலங்கரித்துச் சென்றனர். இவர்கள் அனைவரும் நல்ல பதவிகளில் இருந்து சமூகத்தின் பெயரைக் காத்தனர். தம்மால் முடியுமானதை சமூகத்திற்குச் செய்தனர். 

1. ளு.ர்.ஆ.இஸ்மாஈல்
2. சேர். ராசிக் பரீத் 
3. மாகான் மாகார்
4. வு.டீ. ஜாயா 
5. டாக்டர் யு.ஊ.ஆ. கலீல் 
6. ஊ.ளு.ஆ. மரிக்கார் 
7. கேட் முதலியார் ஆ.ளு.காரியப்பர்
8. பழீல் கபூர் 
9. நைனா மரிக்கார்
10. டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் 
11. யு.ஊ.ளு. ஹமீத் 
12. பாக்கீர் மாக்கார் 
13. ஜாபிர் ஏ. காதர் 
14. ஆ.ஆ. முஸ்தபா 
15. ஆ.நு.ர். முஹம்மத் அலி
16. ஆ.ஆ. அப்துல் மஜீத் 
17. பரீத் மீரா லெப்பை 
18. டாக்டர் ஆ.ஆ. ஜலால்தீன் 
19. ஆ.நு.ர்.மஹ்ரூப் 
20. ஐ.யு. காதர் 
21. வு.யு. ஆமித் 
22. மூதூர் அப்துல் மஜீத் 
23. யு.ஊ அஹ்மத் 
24. மஜீத் நிந்தவூர் (ளறநநவ)
25. லதீப் சின்ன லெப்பை
26. யு.ஆ.யு அஸீஸ்
27. அஸீஸ் (யு.யு)
28. ஆ.ர்.ஆ அஷ்ரப் 
29. நூர்தீன் மஷ்ஹுர்
30. மருதூர் கனி (ஹனீபா)
31. ரு.டு.ஆ.மொஹிதீன் 
32. N.ஆ.புகார்தீன்



இவர்கள் எனது அரசியல் முன்னோர்கள். அவர்களை அல்லாஹ் மன்னித்து நல்லருள் புரிவானாக. இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் பின்வருவோரையும் நாம் மறந்து விட வில்லை. அவர்கள்:

1. ஆ.ர். முஹம்மத் 
2. யு.ர்.ஆ. பௌசி 
3. அலவி மௌலானா
4. யு.சு.ஆ. மன்ஸுர்
5. பொலன்னறுவை அப்துல் மஜீத் 
6. ஆ.ளு இஸ்ஸதீன் 
7. யு.ர்.ஆ. அஸ்வர் 
8. பேரியல் அஷ்ரப் 
9. யு. உதுமான் லெப்பை
10. ஹிஸ்புல்லாஹ் 
11. பைஸர் முஸ்தபா
12. அதாவுல்லாஹ் 
13. நிஜாம் தீன் 
14. ஹுனைஸ் பாரூக் 
15. புண்ணியமூர்த்தி அபூ பக்கர் 
16. இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 
17. ஹஸன் அலி 
18. அப்துல் மஜீத் 
19. நௌஸாத் 

20. பஷீர் ஷேகு தாவுத்
21. முத்தலிப் பாரூக் 
22. தௌபீக் 
23. அஸ்லம் 
24. நஜீப் ஏ மஜீத் 
25. ஷபீக் ரஜப்தீன் 
26. திடீர் தவ்பீக் 
27. ஜனாப். முஸம்மில்
28. அன்ஜான் உம்மா
29. ரு.டு.ஆ பாரூக்



இதுவெல்லாம் உங்களுக்கு தெரியாதவைகள் அல்ல. இருந்தாலும் நினைவுபடுத்துவதற்காக கூறுகின்றோம். நிச்சயமாக நீங்களும் நல்லது செய்ய வேண்டுமென்றே முன்வந்துள்ளீர்கள். அல்லாஹ்வின் உதவி நச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்.

தேர்தலும் வந்து போய்விட்டது. அதில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை வைத்து பொது விடயங்களில் பிரிந்து விடாதீர்கள். ஏனைய சமூகத்தவர்களைப் பாருங்கள் அவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருந்து தம் சமூக விடயங்களில் கவனம் செலுத்துகின்றனர். முன்மாதிரியான சமூகம் என்று போற்றப்படும் நீங்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தால் உங்களை நம்பி வாக்களித்தவர்கள் ஏமாற்றப்பட்டவர்களாகிவிடுவார்கள். 

ஒரு புதுயுகம் படையுங்கள்:
ஒரு காலம் இருந்தது பேரம் பேசி ஆட்சிகளில் இடம்பெற முடிந்தது. அந்த சக்தி குன்றிவிட்ட நிலையில் முஸ்லிம் உறுப்பினர்களான நீங்கள் இம்முறை பாராளுமன்றம் செல்கின்றீர்கள்.

உங்களது சக்தி ஒற்றுமையில் தான் தங்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். எப்பொழுதும் குர்ஆன் ஹதீஸ் என்றும் அல்லாஹ் ரஸுல் என்றும் கூறும் நாங்கள் ஒற்றுமை மூலமே எதையும் சாதிக்க முடியும். 
அன்றி. நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்படுங்கள். உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள் அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் சக்தி (ஆற்றல்) இல்லாமல் போய்விடும். ஆகவே நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொன்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்வாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல் அன்ஃபால் - 46)

நீங்கள் ஐவேளையும் தொழுபவர்கள் அதிலும் தவறாமல் ஸுபஹுத் தொழுகையை நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 
யார் ஸுபஹுடைய தொழுகையை தொழுகிறாரோ, அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். 

அல்லாஹ்வின் உதவி வேண்டுமா? அதை நீங்கள் இரண்டு வழிகளில் பெற்றுக் கொள்ளலாம். 

1. பாவ காரியங்களை விட்டு ஒதுங்குங்கள், அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.
உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்களுடைய சிறிய பாவங்களுக்கு நாம் அதனை பரிகாரமாக்கி உங்களை மிக்க கண்ணியமான இடங்களிலும் நுளைவிப்போம். 4:31
2. உங்களது தொடர்பதிகாரிகளாக நல்லவர்களை வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். 
நபி ஸல்லல்லாஹு அவைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 
ஒரு தலைவருக்கு அல்லாஹ் நல்லதை நாடினால் உண்மையாக நடக்கும் துணையாளர்களான அமைச்சர்ளைக் கொடுப்பான். அவர்கள் அந்தத் தலைவன் மறந்த விடயத்தை நினைவுபடுத்துவான். நினைவுற்றால் துணையாக நிற்பான். அல்லாஹ் அந்தத் தலைவனுக்கு கெடுதியை நாடினால் கெட்ட அமைச்சர்களைக் கொடுப்பான். அந்தத் தலைவன் மறந்தால் நினைவுபடுத்தமாட்டான். நினைவுற்றால் உதவவும் மாட்டான். ஆறிவிப்பாளர் : ஆயிஷா (றழி)  நூல் அபூ-தாவூத் 

எமது சமூகம் கல்விகேள்விகளில் பின்தள்ளப்பட்டுள்ளது தொழில் துறையில் பாதிக்கப்பட்டுள்ளது அரபு, இஸ்லாம் பாட போதனைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாதிருக்கிறார்கள். வானொலி முஸ்லிம் சேவைசீர் செய்யப்பட வேண்டும். இன்னும் பல்லாயிரம் பிரச்சினைகள் உள்ளன. எமது சமூகப்பிரச்சினைகலைப் பற்றி இவர்கள் தேவையான தகவல்களைப் பெற புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு குழுவை வைத்துக் கொள்வதோடு தவனை குறித்து சந்திப்புக்களை நடாத்திக் கொள்வது உங்களுக்குத் துணையாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

பல சமூகங்களைச் சேர்ந்தவர்களோடு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் என்பதை நாம் மனதார ஏற்றுக்கொள்கிறோம். அதே நேரம் இஸ்லாம் தான் எமது அடிப்படையென்ற நிலையில் உங்கள் செயற்பாடுகளை அமையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்இஸ்லாத்தின் வரம்பை மீறிவிடாதீர்கள். 

ஒருவனது வெற்றி அவன் யாரை தனது முன்னோடியாகக் கொள்கிறானோ அதைப் பொருத்தே அமைந்துவிடுகிறது. எமது நாட்டு அரசியல் முன்னோடியாக இருந்தவர்கள் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் அன்னார் காலமாகும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் அவர்களது சாலிஹான பிள்ளைகள் மாத்திரமே. அன்னாருக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டும்.

அன்னாரது சேவைகளுள் சில: 
சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபிக்கவும் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள் 
கல்வி வானொலி அமைச்சராக இருக்கும் பொழுது முஸ்லிம் பகுதியை ஆரம்பித்தார். 
மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கினார்
தமிழ் இலக்கியத்துக்குப் பதிலாக இஸ்லாமிய இலக்கிய பாடமொன்றை அறிமுகப்படுத்தினார். 
பல்கலைக்கழகம் புக இஸ்லாமிய நாகரீக பாடத்தை ஒரு பாடமாக்கினார்
வீடமைப்பு அமைச்சராக சேவையாற்றினார்

இவ்வாறு அரசிலே பல அமைச்சுக்களை வகித்த அவர்களது சேவையை முஸ்லிம் முஸ்லிமல்லாத மக்கள் அனைவரும் நினைவு கூறுகின்றனர்.
அவர்களது சமூக உணர்வு பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டதைக் காணலாம்.

உதாரணமாக : னு.ளு சேனாநாயக்க கட்சியில் தொழில் மந்திரியாக இருந்த கலாநிதி வு.டீ ஜாயா அவர்களை பாகிஸ்தானுக்குத் தூதுவராக அனுப்ப அரசு முடிவு செய்தது. இது பற்றி டாக்டர் பதியுத்தீன் அவர்களைச் சந்தித்துக் கூறினார்கள். அப்போது அவர்கள் ளசை pழறநச ளை iளெனைந உழரவெசல ளை ழநெ அடைடழைn வiஅந டிநவவநச வாயn pசநளவபைந ழரவளனைந லழரச உழரவெசல வெளிநாட்டிலுள்ள கீர்;த்திகளை விட உள்நாட்டிலுள்ள அதிகாரம் பண்மடங்கு மேலானது என்று கூறிக்கதைத்துக் கொண்டிருந்த அவர்கள் மேலும் சொன்னார்கள் முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றிப Nசுவதற்கு அமைச்சரவையிலிருந்து ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் நீங்களே! நீங்களும் வெளிநாடு சென்றால் இலங்கை முஸ்லிம்கள் அரசியல் அனாதையாகிவிடுவார்கள் என்றார்கள். 
சமூகத்துக்கும் நாட்டுக்கும் சேவை செய்த டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் போன்றோரின் வரலாறுகளை நீங்கள் வாசித்துப் பார்ப்பதன் மூலமே உங்களுக்கு அவர்கொண்டிருந்த இலட்சியம் துணிவு தைரியம் என்பன உங்களிலே வளரும் சமூகத்துக்காக எதனையும் செய்யும் எண்ணமும் வளர்ந்துவிடும். 

அன்பின் சகோதரர்களே! 

பாராளுமன்றத்துக்குத் தெரிவான உறுப்பினர்களாகிய உங்களை நாங்கள் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வருட தேர்தலுக்கும் கடந்துபோன தேர்தல்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடகள் உள்ளன என்பதை நாங்கள் உங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. உங்களது அசியல் வாழ்வில் வெற்றி உங்களில் ஏற்படும் பயபக்தியைப் பொறுத்ததாகும். எப்போதும் அல்லாஹ்வைப் பயந்து கொள்வதோடு நீங்கள் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ள நல்லவர்களை எடுத்தக்கொள்ளுங்கள். உங்களை வைத்து அவர்கள் பிழைப்பு நடத்தாமல் எப்போதும் எங்களுக்குப் பக்க துணையாக இருப்பவர்களை வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் எமக்கும் றஹ்மத் செய்வானாக!!

No comments:

Post a Comment