Pages

Wednesday, September 2, 2015

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு

எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் சென்ற 01.09.2015 மாலை அதன் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக்; றிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு அஷ்-ஷைக் ஹாஷிம் சூரி அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நிகழ்ச்சி அஷ்-ஷைக்; அர்கம் நூர் ஆமித் அவர்களின் கிராஅததுடன்; ஏழு மணியளவில் ஆரம்பமானது.



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் அஹ்மத் முபாறக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆவ்வுரையில் அவர்:


கடந்த காலத்தில்; பாராளுமன்றத்தின் முஸ்லிம் பிரதிநிதிகளாக இருந்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் பணியாற்றிய பிரதிநிதிகளை ஞாபகம் செய்து, தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதிகளின் பொறுப்புகள் பற்றியும், கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தாhர். அதில் அவர்:


'சென்ற கால அரசியல் பேரம் பேசி ஆட்சிகளில் இடம்பெற முடிந்தது. அந்த சக்தி குன்றிவிட்ட நிலையில் முஸ்லிம் உறுப்பினர்களான நீங்கள் இம்முறை பாராளுமன்றம் செல்கின்றீர்கள். உங்களது சக்தி ஒற்றுமையில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். எப்பொழுதும் குர்ஆன் ஹதீஸ் என்றும், அல்லாஹ் ரஸுல் என்றும் கூறும் நாங்கள், ஒற்றுமை மூலமே எதையும் சாதிக்க முடியும்.


நீங்கள் ஐவேளையும் தொழுபவர்கள் அதிலும் தவறாமல் ஸுபஹுத் தொழுகையை நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். அல்லாஹ்வின் உதவி வேண்டுமா? அதை நீங்கள் இரண்டு வழிகளில் பெற்றுக் கொள்ளலாம்.


1. பாவ காரியங்களை விட்டு ஒதுங்குங்கள், அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.


2. உங்களது தொடர்பதிகாரிகளாக நல்லவர்களை வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.


மேலும் சென்ற கால முஸ்லிம் அரசியற் தலைவர்களின் தன்னலமிக்க சமூகப் சிந்தனைகளையும் நாம் நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம். அவர்களின் ஆழமான சமூக உணர்வுகள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டதைக் காணலாம்.


D.S. சேனாநாயக்க கட்சியில் தொழில் மந்திரியாக இருந்த கலாநிதி T.B ஜாயா அவர்களை பாகிஸ்தானுக்குத் தூதுவராக அனுப்ப அரசு முடிவு செய்தது. இது பற்றி டாக்டர் பதியுத்தீன் அவர்களைச் சந்தித்துக் கூறினார்கள். அப்போது அவர்கள் "sir power is inside country is one million time better than prestige outside your country" வெளிநாட்டிலுள்ள கீர்;த்திளை விட உள்நாட்டிலுள்ள அதிகாரம் பண்மடங்கு மேலானது என்று கூறிக்கதைத்துக் கொண்டிருந்த அவர்கள் மேலும் சொன்னார்கள:; முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு அமைச்சரவையிலிருந்து ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் நீங்களே! நீங்களும் வெளிநாடு சென்றால் இலங்கை முஸ்லிம்கள் அரசியல் அனாதையாகிவிடுவார்கள் என்றார்கள்.


சமூகத்துக்கும் நாட்டுக்கும் சேவை செய்த டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் போன்றோரின் வரலாறுகளை நீங்கள் வாசித்துப் பார்ப்பதன் மூலமே உங்களுக்கு அவர்கொண்டிருந்த இலட்சியம் துணிவு தைரியம் என்பன உங்களிலே வளரும் சமூகத்துக்காக எதனையும் செய்யும் எண்ணமும் வளர்ந்துவிடும்' என்ற உரையை ஆற்றி முடித்தார்.


நிகழ்வில் உரையாற்றிய ஜம்இய்யாவின் பிரதி தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளின் பொறுப்புகள் கடமைகள் குறித்து இரத்தினச் சுருக்கமாகத் தெளிவுபடுத்தியதுடன் பாராளுமன்ற பிரதிநிதிகள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய காத்திரமான பணிகள் குறித்தும் தெளிவுபடுத்தினார். அதில் அவர்:


'முஸ்லிம் பிரதிநிதிகளாகிய நீங்கள் சமயம், சமூகம் சார்ந்த சகல விடயங்களிலும் முழு உற்சாகத்தையும், ஆர்வத்தையும் காட்ட வேண்டும். பாராளுமன்ற விவாதங்களிலும் கூட அழகாக தமது கருத்துக்களையும் முன்வைக்க பங்கேற்க வேண்டும். குழுக்களின் அங்கத்தவர்களாக செயற்படுபவர்கள் கூட தமது முழுமையான பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும். அத்துடன் இவ்வரசு புதிதாக நடைமுறைப்படுத்த இருக்கின்ற கல்வி, சுகாதாரம், போதை ஒழிப்பு போன்ற திட்டங்களில் நீங்கள் எல்லோரும் உங்களது பங்களிப்புக்களை முஸ்லிம்கள் சார்பாக முன்னின்று முழுமையான பங்களிப்புக்களை நல்க வேண்டும்' என்றும் கூறினார்.


அதனைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுண்சிலின் தலைவர் சகோ. என்.எம்.அமீன் அவர்கள் உரையாற்றுகையில்: நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக நீங்கள் இருந்த போதிலும் கொழும்பு முஸ்லிம்களின் நிலையையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இங்குள்ள முஸ்லிம்களின் கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் நீங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


'நீங்கள் எக்காரியத்தையும் உலமாக்களோடும், கல்விமான்களோடும் கலந்தாலோசனை செய்து கொண்டே காரியமாற்ற வேண்டும். உங்களுக்குத் தேவையான விடயங்களில் வழிகாட்ட அல்லது தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஏணைய கல்விமான்களும் தயாராகவே இருக்கின்றனர் என தமதுரையில் தேசிய சூரா சபையின் உதவித் தலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் எஸ்.எச்.எம்.பழீல் குறிப்பிட்டார்.


அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஒருவரை உரையாற்ற வரும்படியும், அந்தப் பொறுப்பை இன்றைய மூத்த பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.பவுசி அவர்களிடம் ஒப்படைப்பதாகவும் ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் கூற அமைச்சர் பவுசி அவர்கள் தாம் பா.உ சகோ. றவூப் ஹக்கீம் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக உரையாற்ற நியமிப்பதாகக் கூற பா.உ றவூப் ஹக்கீம்; உரையாற்றினார். ஆவர் தமதுரையில்:


'நீங்கள் எல்லோரும் எம்மை ஒற்றுமையாக இருக்கவே சொல்கிறீர்கள். இதனை கட்டாரில் இருக்கும் சர்வதேச அறிஞரான ஷேக் கர்ழாவி அவர்களை நான் அண்மையில் சந்தித்த போதும் இதனையே அவர்களும் கூறினார்கள். சிறுபான்மையான இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் கருத்து முரண்பட்டுக் கொள்ளாமல் எப்பொழுது ஒற்றுமைப் படுவார்கவோ அப்போது யாராலும் எந்தவொரு தீங்கினையும் செய்ய இயலாது எனக் குறிப்பிட்டார். ஆகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் நீங்கள் குறிப்பிட்டது போல எமது மூத்த அரசியல்வாதியான சகோ.பவுசி அவர்களது தலையில் நாம் ஒன்றுபட்டு செயற்பட தயாராக இருக்கிறோம'; எனக் குறிப்பிட்டார்.


இறுதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்கள் உரையாற்றினார். அவர் தமதுரையில்:


'உங்களை நாம் இங்கு அழைத்திருப்பது ஒருசில குறிப்பிட்ட விடயங்களை மாத்திரம் உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தான். அரசியல் தலைமைகளாகிய நீங்கள் உல்லோரும் ஒன்றுபட வேண்டும். சென்ற கால கசப்புக்களை மறந்து, ஒருவருக்கொருவர் மன்னித்து, விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். இதற்கு உங்களுக்கு எமது ஜம்இய்யா அழகான முன்மாதிரியாக இருக்கிறது. நாம் இங்கு பல கருத்துக்கள் அல்லது சிந்தனையுள்ளவர்கள் இருந்தும் நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மிக அழகாக விட்டுக் கொடுப்புடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்கிறோம். இதே போன்று நீங்களும் நடக்குமிடத்து பல விடயங்களை எம்மால் சாதித்துக் கொள்ள முடியும்.


அது போலமே இஸ்லாத்திற்கு முரணான பல கொள்கைகள் உருவாகி முஸ்லிம்களின் ஈமானைப் பாதிக்கும் நிலைகள் நாளாந்தம் அதிகரித்த வருகிறது. இது தொடர்பாகவும் நீங்கள் எமது வழிகாட்டல்களின் படி நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும்.


அத்துடன் உங்களது சேவைகள் முஸ்லிம்களை மையமாக வைத்து மாத்திரமில்லாமல் மனிதர்கள் என்ற வகையில் ஏணைய சமூகத்தாரையும் இணைத்துக் கொண்டு, இது எமது நாடு, எமது தேசம் என்ற அடிப்படையிலேயுமே பணியாற்ற வேண்டும். நாட்டின் இறைமையைப் பாதுகாத்துக் கொண்டு செயற்பட வேண்டும்.


நாட்டின் புதிய ஜனாதிபதி உற்பட பிரதமர் அவர்களும் இந்நாட்டை நல்லதொரு கலாசாரம் நிறைந்த நாடாகவும், சகவாழ்வைக் கட்டியெழுப்பவும் முழு மூச்சுடன் செயற்படுகின்றனர். இதற்காக நாமும் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதுடன் அவர்களுக்கு நாம் நன்றியும் செலுத்துகிறோம்.


மேலும் உங்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் வழங்கப்படுகிறது. அது ஒரு வாழ்த்துக் கேடயமாக மட்டுமல்லாமல் அதிலே 11 விடயங்களை குறிப்பிட்டு சில வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனை உங்களது வாழ்வில் எடுத்து நடந்தாலே இன்ஷா அல்லாஹ் பெரிய மாற்றங்களை எதிர் பார்க்கலாம்' எனவும் குறிப்பிட்டார்.


நிகழ்வின் இ;றுதியில் பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவரும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியிலேயே கௌரவ பா.உ கபீர் ஹாஷிம் அவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


























2 comments: