Pages

Monday, September 7, 2015

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்தைத் தத்தெடுங்கள் : போப் பிரான்சிஸ்

1.12-720x480
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப்  பிரான்சிஸ்அகதிகளை தத்தெடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல், வன்முறைகள் மற்றும் வறுமை நிலை காரணமாக சிரியா, ஈரான் மற்றும் ஏனைய ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து மக்கள் பெருந்தொகையில் வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு வெளியேறும் மக்கள் |ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். ஆயினும் அண்மைக்காலமாக அகதிகளுக்கான தஞ்சக் கோரிக்கையை ஐரோப்பிய நாடுகள் பலவும் நிராகரித்து வந்தனர்.

இந்நிலையில், கிரோக்கத்திற்கு செல்லும் வழியில் கடலில் படகு கவிழ்ந்ததில் பலியான ஆய்லன் என்ற மூன்று வயது சிறுவனின் சடலம் அண்மையில் கடற்கரையில் கரையொதுற்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதனைச் சித்திரிக்கும் வகையில் வெளியான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவியதுடன் உலக நாட்டு மக்களின் கண்டனத்திற்கும் ஆளாகி இருந்தது.
இந்தப் புகைப்படம் வெளியான பிறகு ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடு அகதிகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தது. இதனால் அங்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறுகையில், ‘‘ஐரோப்பிய திருச்சபை, ஒவ்வொரு மத சமூகம் மற்றும் துறவி மடாலயம் ஒரு அகதி குடும்பத்தைத் தத்தெடுக்க வேண்டும். அகதிகள் வாடிகனில் பாதுகாப்பாக வாழ வழிவகை செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment