Pages

Sunday, August 31, 2014

சில அரசியல்வாதிகள் போல வாக்கு வங்கிக்காக நான் பொய் சொல்ல மாட்டேன் - கம்பளை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் ஆதங்கம்-


சென்ற 30.08.2014 அன்று கம்பளை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும், பிரதியமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்களுக்குமிடையில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பொன்று அவருடைய கம்பளை இல்லத்தில் இடம்பெற்றது. அச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிட்டதாவது:

Friday, August 22, 2014

சிங்கள மன்னர்களின் பாதுகாப்புக்கே வீதியோரங்களில் முஸ்லிம்களைக் குடியமர்த்தினர் – ரணில்

SAMSUNG CSC
ஒல்லாந்தர், போத்துக்கேயர்  காலத்திலும் சிங்கள மன்னர்களைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்களே முன்னின்றுள்ளார்கள். அதற்காகத்தான் கண்டிக்குச் செல்லும் வீதிகளில் இடை  இடையே முஸ்லீம்களை பண்டைய கால சிங்கள மன்னர்கள் குடியமர்த்தினார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் யூ.எல்.எம் பாருக்கின் 50 வருட கால அரசியல் வாழ்வும்  “யூக  பெரலின் துங்கோரல அபிமானய” என்ற  நூலும் நேற்று  பி.எம். ஐ.சி.எச்.ல் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது.

ஐ.தே.க., நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

IMG-20140822-WA021
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுகிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
ஊவா மாகாண சபை தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் சிரிகொத கட்சித் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஐக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் இணைத் தலைவர் கரு ஜயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக, தேசிய அமைப்பாளர் தயா கமகே, தவிசாளர் கபீர் ஹாசிம், மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், செயலாளர் நஜா முஹம்மது உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். (ஸ)

Tuesday, August 19, 2014

Telegram : பற்றி விக்கிபீடியா சொல்லும் விடயங்கள் - ஸ்தாபகர்கள் முஸ்லிம்கள் அல்லர்


பற்றி விக்கிபீடியா சொல்லும் விடயங்கள் - ஸ்தாபகர்கள் முஸ்லிம்கள் அல்லர்

இங்கே க்கிளிக் செய்யவும்

Telegram : முஸ்லிம் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மென்பொருளா?

இன்று சமூகவளையதலங்களில் பரவலாக ஒரு விடயம் பரப்பப்படுகிறது. அதாவது இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படும் Whatsapp எனப்படும் கைத்தொலைபேசி மென்பொருள் ஒரு யூதனால் வடிவமைக்கப்பட்டதென்றும், எனவே, அதனை நீக்கிவிட்டு ஒரு ஜோர்டானிய முஸ்லிமால் வடிவமைக்கப்பட்ட “Telegram” எனப்படும் மென்பொருளை அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
“Whataspp” ஐப் பொறுத்தவரை இது ஒரு யூதனுடைய தயாரிப்பு என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் “Telegram” ஒரு ஜோர்டானிய முஸ்லிமுடைய தயாரிப்பு என்பது நம்பகத்தன்மை அற்ற ஒரு செய்தியாகும்.
இந்த “Telegram” மென்பொருளைப் பற்றி நாம் தேடிப்பார்க்கும் போது, பிரபல இணையதள தகவல் களஞ்சியமாகிய “விக்கிபிடியா” வில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, “இது ரஷ்யாவில் இருக்கும் VK எனப்படும் பிரபல இணையதளத்தின் உரிமையாளர்களாகிய “நிகலோ” மற்றும் “பவல் ட்ரோப்” எனப்படும் இரு சகோதரர்களால் 2013ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும்.
எனவே நம்பகமான எந்த இணையதளங்களிலும் இது ஒரு ஜோர்டானிய முஸ்லிமின் தயாரிப்பு என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே, ஒரு தகவலைப் பரப்பும் போது அதன் உண்மை நிலையை அறிந்துகொள்வது கட்டாயமாகும்.

Thursday, August 14, 2014

பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – ஜனாதிபதி அறிவிப்பு

பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.
பலஸ்தீனின் காஸா நகர் மீது இஸ்ரேலிய சியோனிஸ படை மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களால் காஸா நகர் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது.
பள்ளிவாயல்கள், பாடசாலைகள் போன்ற வற்றின் மீது வேண்டுமென்றே சியோனிஸ படைகள் குண்டு வீசி தாக்குதல்களை நடாத்தி வருவதால் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை கண்டித்து இலங்கையில் பல்வேறு அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது. இதன்போது பலஸ்தீனின் மக்களுக்காக இலங்கை அரசு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பலஸ்தீனின் மக்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக  ஜனாதிபதி அறிவித்துள்ளார். (ஸ)

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

SLTJ1















இஸ்ரேலிய அராஜக அரசினால் பலஸ்தீன் மீது மேற்கொள்ளப்படும்தாக்குதலைக் கண்டித்து ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் மாளிகாவத்தையில் இன்று பிற்பகல் 1 மணி முதல் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டது.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான தௌஹீத் ஜமாஅத் ஆதரவாளர்கள், பெண்கள் பல பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வீதி ஊர்வலத்தால் இப்பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வார்ப்பாட்டத்தின்போது பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான இனச் சுத்திகரிப்பு தாக்குதலை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியும், அக்கிரமம் புரியும் அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப்படைகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரியும், இஸ்ரேலுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளை நிறுத்தக் கோரியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதேநேரம், ஸ்ரீலங்கா தௌஹித் ஜமாஅத், பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு, கோட்டை பகுதிகளில் இன்று புதன்கிழமை (13.08.2014) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தப் போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்திருந்த போதிலும் அந்த அமைப்பு இன்று எந்த பேரணியையும் நடத்தவில்லை.
SLTJ2SLTJ3SLTJ4SLTJ5SLTJ6SLTJ7SLTJ8SLTJ9SLTJ10SLTJ11
The following two tabs change content below.

Wednesday, August 13, 2014

ISIS ன் உண்மை நிலை வெளியாக ஆரம்பித்து விட்டது.


 ISIS இல் இருந்து விலகிய ஒருவர் வழங்கும் பேட்டி !



அல்துகானை பாராட்டி ஷேக் கர்ழாவி கடிதம் - رسالة تهنئة من الإمام القرضاوي اثر فوز الرئيس أردوغان


رسالة تهنئة من الإمام القرضاوي اثر فوز الرئيس أردوغان في الانتخابات الرئاسية التركية
بسم الله الرحمن الرحيم
فخامة الرئيس التركي المنتخب والمنصور من الرحيم الرحمان ومن أهل الفضل والإيمان ومن جموع الشعب المؤمن بحقوق الإنسان رجب طيب أردوغان حفظه الله ورعاه وسدد خطاه لما يحبه ويرضاه
السلام عليكم ورحمة الله وبركاته وبعد،،
يسرني أن أعلن عن فرحتي الخاصة، وعن فرحة إخواني من علماء الأمة في الاتحاد العالمي لعلماء المسلمين عامة، بفوزكم في الانتخابات التركية.
وإننا نشهد الله تعالى أنك حبيب إلينا، أثير لدينا؛ بل حبيب للشعب التركي وحبيب للأمة الإسلامية والعربية حيثما كانت.
فالحمد لله الذي صدق وعده، ونصر عبده، وأعز جنده.
نفرح جميعا بفضل الله تعالى ورحمته، أن هيأ الرجل المناسب للمكان المناسب، كما قال تعالى: {قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ} [يونس:58].
لقد فاز الشعب التركي بممارسة حقه في اختيار رئيسه قبل أن تفوزوا.
ومن حق الإخوة الأتراك أن يفرحوا جميعا: من انتخبوا أردوغان، ومن لم ينتخبوه؛ لأن خيره سيكون للجميع، وشدته ستكون على المقصر والمخرب من أي فئة .
و من حق الإخوة في غزة، وفي فلسطين أن يفرحوا؛ لأن أحد فرسانهم المأمولين قد نجح، وأعلن ترحيبه بعلاج كل جريح أو مريض يأتي من غزة.
و من حق الإخوة في مصر، وفي تونس وفي المغرب وفي سوريا، وفي العراق، وفي ليبيا، وفي اليمن، وفي الصومال وفي السودان وفي سائر بلاد العرب و الاسلام
وفي كل بلد يطلب الحق والقوة والحرية؛ أن يعلن فرحته بنصر الله الذي نصر أردوغان.
ومن حق المسلمين في أنحاء العالم أن يفرحوا بأن لهم صوتا قويا يدافع عنهم.
لقد أولاكم الشعب التركي ثقته الغالية، في أول انتخابات رئاسية مباشرة، وجاء فوزكم الحاسم تعبيرا عن اقتناعه العميق بإنجازاتكم الكبيرة، وسياستكم الحكيمة تجاه بلدكم العظيم تركيا.
جاءت هذه الانتخابات لتؤكد على جدارة الشعوب الشرقية، العربية والمسلمة لممارسة حقها في اختيار من يحكمها، من غير وصاية خارجية عليها، وعلى حقها في الحرية والكرامة والديمقراطية، وليس كما يريد المستبدون في بلادنا، إعادة عقارب الساعة إلى الوراء، وأن يكون من يملك القوة، لا سيما العسكرية منها، هو من يحكم، رغما عن إرادة الشعب.
نرجو لكم مزيدا من النجاح والتوفيق في تحقيق آمال وطموحات الشعب التركي، ونتوقع منكم – كما هو العهد بكم - مزيدا من الدعم لقضايا العرب والمسلمين والمضطهدين في العالم، وفي القلب منها قضية فلسطين، وعلى يقين من أن فوزكم بداية تاريخ جديد للدولة التركية.
وفقكم الله لما فيه الخير والتقدم لبلدكم، وقواكم على نصرة قضايا الأمَّة العربية واﻹسلامية، وحفظكم الله من كل كيد وسوء.
أخوكم
يوسف القرضاوي
رئيس الاتحاد العالمي لعلماء المسلمين

முஸ்லிமாக மாறியது ஏன்? யுவன் விளக்கம்

Why Islam? Explains Yuvan

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. 100 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். இசைஞானி இந்து மதத்தில் பக்தி பழம். தேவாரம், திருவாசகத்தை கரைத்து குடித்தவர். சரஸ்வதி தனக்குள் இருப்பதாக நினைப்பவர். அவரது மகன் முஸ்லிமாக மாறியது அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிறது. நான் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்பதற்கு யுவன் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: எனக்கு என்னோட அம்மான்னா உயிர். என்னோட கஷ்டங்களில் கூட இருந்தவங்க. தன்னந்தனி தூணாக இருந்து எங்க குடும்பத்தை காப்பாத்தினவங்க. அவங்களோட இழப்பு என்னை மாத்திடுச்சு. ஒரு வேலையாக மும்பை போய்விட்டு திரும்பியபோது அம்மா மரணப்படுக்கையில இருந்தாங்க. நானும், தங்கையும் அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். போற வழியில அம்மா என் கையை இருக்கமா பிடிச்சிருந்தாங்க. திடீர்னு கை நழுவி விழுந்தது. அம்மா எங்களை விட்டு போயிட்டாங்க. ஒரு வினாடிக்கு முன்பு அவருக்குள்ள இருந்த ஜீவன் இப்போ எங்க போச்சுன்னு எனக்குள்ள கேக்க ஆரம்பிச்சேன். அதுக்கான விடை கிடைக்கல.

அம்மாவோட பிரிவு என்னை தனிமைப்படுத்திடுச்சு. ரொம்ப கவலையில இருந்த நேரம் ஒரு முஸ்லிம் நண்பர் மெக்கா போய்விட்டு திரும்பியிருந்தார் அவர் என்னிடம் "யுவன் நீ ரொம்ப கவலையில இருக்கே, தாங்க முடியாத கவலை வரும்போது இந்த முசல்லாவில் (தொழுகைக்கு பயன்படும் தரைவிரிப்பு) கொஞ்ச நேரம் உட்காரு போதும்" என்று கொடுத்துவிட்டுச் சென்றார். எனக்கு நம்பிக்கை இல்லாம அதை மூலையில போட்டேன்.

ஒரு கட்டத்துல அம்மா கவலை ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சது. மன அழுத்தம் அதிகமாச்சு. அந்த முசல்லா நினைவு வந்து அதன் மீது உட்கார்ந்து யா அல்லா... என்னோட பாவங்களை மன்னிச்சு, என்னை இந்த கவலையிலிருந்து வெளியில கொண்டு வந்த விடுன்னு கத்தி கதறினேன். "வா... இஸ்லாத்துக்கு வந்துவிடு"ன்னு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு வந்துச்சு. அது ஒரு அற்புதமான உணர்வு. அதை வார்த்தையில் வெளிப்படுத்த முடியாது.

அன்றிலிருந்து அதாவது 2012ம் ஆண்டிலிருந்து திருக்குரான் மொழிபெயர்ப்புகளை படிக்க ஆரம்பிச்சேன். தொழுகை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை கத்துக்க ஆரம்பிச்சேன். 2014 ஜனவரியில் முஸ்லிமாக மாறுவது என்று முடிவு செய்தேன். மரணத்தின் தருவாயில் எங்கம்மா "எனக்கு பிறகு நீ தனிமரமாயிடுவே இஸ்லாம்ங்ற மரத்தின் கீழ் ஒதுங்கிக்கோ"ன்னு எங்கம்மா சொன்னதாவே நான் எடுத்துக்கிட்டேன்.

நான் முஸ்லிமாக மாறியது என் அப்பாவுக்கு பிடிக்கல. என் அண்ணனும் அண்ணியும் என் பக்கம் நின்னாங்க. படங்களில் என் பெயர் யுவன் ஷங்கர் ராஜான்னு வர்றதால இன்னும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ரிக்கார்டுகளில் பெயரை மாற்றவில்லை. விரைவில் மாற்றுவேன். என்றார் யுவன். http://cinema.dinamalar.com/

Tuesday, August 12, 2014

POSTPONEMENT NOTICE

POSTPONEMENT NOTICE

images
ජාතික ෂූරා සභාවේ සංවිධානයෙන් අද දින (13/08/2014 බදාදා) තැපැල් මූලස්ථාන ශ්‍රවණාගාරයේදී  අමාත්‍ය ගරු වෛද්‍ය රාජිත සේනාරත්න පා.ම විසින් “වෛර ප්‍රචාර හා ශ්‍රී ලංකාවේ අනාගත” යන මාතෘකාවෙන් පැවැත්වීමට නියමිතව තිබූ ප්‍රසිද්ධ දේශනය නොවැලැක්විය හැකි හේතුන් මත කල් දමා ඇති බව කණගාටුවෙන් දන්වා සිටිමු.
නැවත පවත්වන දිනය ඉදිරියේදී දැනුම් දෙනුම් ලැබේ.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹஸன் மௌலவி காலமானார்!!

Thursday, August 7, 2014

ஹமாஸை அழிக்க முடியுமா?

ஹமாஸை அழிக்க முடியுமா?

அடிக்கடி எல்லை தாண்டி எல்லை மீறிய பயங்கரவாதச் செயலில் இஸ்ரேல் ஈடுபடுகின்றது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேல் தன் மீது செய்யப்படும் தாக்குதலுக்கு அளவிற்கு மிஞ்சிய பதிலடிகள் கொடுக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. இஸ்ரேலிற்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. இஸ்ரேலியர்களும் வாழ வேண்டும் எனச் சொல்பவர்களும் உண்டு.

கூட்டத்தை குழப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: வாசுதேவ

Vasudeva_Nanayakkaraஅமைப்புகள் கூட்டங்களையோ, கலந்துரையாடல்களையோ நடத்தும் இடத்திற்குள் பலவந்தமாக எவர் நுழைய முயற்சித்தாலும் அது சட்டவிரோதமானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக இலங்கையின் சட்டத்தை செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருதானையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்கு பிக்குமார் சென்று தடையை ஏற்படுத்தியமை பாரதூரமான குற்றமாகும். பொலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படியான சந்தர்ப்பங்களில் பொலிஸார் உரிய முறையில் செயற்படாதது குறித்து ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.என  தெரிவித்ததாக ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன

தமக்கு கிடைத்த செய்தியை தம் நண்பர்களிடையே பகிர்ந்தளிப்பது ஒரு குற்ற செயல் அல்ல : சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்

இலங்கை முஸ்லிம்களுக்குள் பீதியை ஏற்படுத்தக்கூடிய செய்தியை தொலைபேசி குறுஞ்செய்தி (SMS ) மூலம் பரப்பியதாக குற்றம் சாடப்பட்டு நான்கு முஸ்லிம்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நான்குபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கூறும்போது இனவாதத்தை துண்டும் SMS  செய்தியொன்று முஸ்லிம் மக்களிடையே பரப்பப்பட்டு வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அது குறித்து தாங்கள் தங்களின் விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் கூறினர்.

Monday, August 4, 2014

ஜனாஸா அறிவித்தல்

ஜனாஸா அறிவித்தல்

பாணந்தறை மெக்சன்ஸ் (மல்டிலக்) உரிமையாளர் அல்-ஹாஜ் ஏ.டப்லியு.எம்.மகீன் காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். பல சமூகப் பணிகளுக்கு, தீன் பணிகளுக்கும் பங்காளராக இருந்த இவருக்கு அல்லாஹ் உயரிய சுவனத்தைக் கொடுக்க வேண்டுமென பிரார்த்திப்போமாக!!!