Pages

Sunday, August 31, 2014

சில அரசியல்வாதிகள் போல வாக்கு வங்கிக்காக நான் பொய் சொல்ல மாட்டேன் - கம்பளை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் ஆதங்கம்-


சென்ற 30.08.2014 அன்று கம்பளை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும், பிரதியமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்களுக்குமிடையில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பொன்று அவருடைய கம்பளை இல்லத்தில் இடம்பெற்றது. அச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிட்டதாவது:


நான் பல தசாப்தங்கள் எமது கண்டி மாவட்ட மக்களுக்கு தொடராக சேவை செய்து வருகிறேன். அதனடிப்படையிலேயே மக்கள் ஆதரவு எனக்கு தொடராக இருந்து வருகிறது. அண்மை காலமாக நான் ஜனாதிபதி அவர்களுக்கு ஆதரவு வழங்க தொடங்கியதிலிருந்து பலரும், பல ஊடகங்களும் என்னை முஸ்லிம் விரோதிகளாய் சித்தரித்து வருகின்றனர். நான் ஜனாதிபதியோடு இணைந்ததும் மக்கள் சேவைக்காகத்தான். எனது வாக்கு வங்கியிலும் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் என்னை அறிந்த மக்களும், எனது சேவைகள் பற்றி அறிந்தவர்களும்; என்னோடு தான் இருக்கின்றனர். சில அரசியல் வாதிகள் போன்று வாயளவில் ஜனாதிபதியை திட்டுவது போன்று நடித்து பொய் கூறி நான் வாக்குக் கேட்க மாட்டேன். சில அமைச்சர்களுடைய தொழிலே அரசியல் தான். அரசியல் எனது தொழிலல்ல. அது மக்கள் சேவைக்காகவுள்ள ஒரு ஊடகம். எது எப்படி நடந்தாலும் அரசியலுக்கும் அப்பால் நான் எனது சேவைகளை மக்களுக்காக மரணிக்கும் வரை தொடருவேன். 

அத்துடன் 40 வருட காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்பது எனக்கு திருத்தியளிக்கிறது என்றார்.



No comments:

Post a Comment