இஸ்ரேலிய அராஜக அரசினால் பலஸ்தீன் மீது மேற்கொள்ளப்படும்தாக்குதலைக் கண்டித்து ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் மாளிகாவத்தையில் இன்று பிற்பகல் 1 மணி முதல் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டது.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான தௌஹீத் ஜமாஅத் ஆதரவாளர்கள், பெண்கள் பல பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வீதி ஊர்வலத்தால் இப்பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வார்ப்பாட்டத்தின்போது பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான இனச் சுத்திகரிப்பு தாக்குதலை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியும், அக்கிரமம் புரியும் அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப்படைகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரியும், இஸ்ரேலுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளை நிறுத்தக் கோரியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதேநேரம், ஸ்ரீலங்கா தௌஹித் ஜமாஅத், பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு, கோட்டை பகுதிகளில் இன்று புதன்கிழமை (13.08.2014) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தப் போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்திருந்த போதிலும் அந்த அமைப்பு இன்று எந்த பேரணியையும் நடத்தவில்லை.
The following two tabs change content below.
No comments:
Post a Comment