Pages

Thursday, August 14, 2014

பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – ஜனாதிபதி அறிவிப்பு

பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.
பலஸ்தீனின் காஸா நகர் மீது இஸ்ரேலிய சியோனிஸ படை மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களால் காஸா நகர் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது.
பள்ளிவாயல்கள், பாடசாலைகள் போன்ற வற்றின் மீது வேண்டுமென்றே சியோனிஸ படைகள் குண்டு வீசி தாக்குதல்களை நடாத்தி வருவதால் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை கண்டித்து இலங்கையில் பல்வேறு அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது. இதன்போது பலஸ்தீனின் மக்களுக்காக இலங்கை அரசு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பலஸ்தீனின் மக்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக  ஜனாதிபதி அறிவித்துள்ளார். (ஸ)

No comments:

Post a Comment