நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுகிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
ஊவா மாகாண சபை தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் சிரிகொத கட்சித் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஐக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் இணைத் தலைவர் கரு ஜயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக, தேசிய அமைப்பாளர் தயா கமகே, தவிசாளர் கபீர் ஹாசிம், மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், செயலாளர் நஜா முஹம்மது உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். (ஸ)
http://dailyceylon.com/
No comments:
Post a Comment