Pages

Thursday, September 10, 2015

சவூதி மன்னரின் விருந்தினர்களாக ஹஜ் கடமையினை நிறைவேற்றுபவர்கள் விபரம்:

Saudi-Haj-6சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு புனிதஸ்தலங்களின் சேவகரான அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு சூஊதின் விருந்தினர்களாக 2015ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு 20 இலங்கையர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பயணத்திற்கான பயணச்சீட்டுக்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொறுப்பதிகாரி மம்துஹ் முஹம்மது அலி அல்லாப் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

Monday, September 7, 2015

பாணந்துரை நோலிமிட்டை எரித்தது கோட்டா - ராவய ஆசிரியர் அதிர்ச்சித் தகவல்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்தைத் தத்தெடுங்கள் : போப் பிரான்சிஸ்

1.12-720x480
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப்  பிரான்சிஸ்அகதிகளை தத்தெடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல், வன்முறைகள் மற்றும் வறுமை நிலை காரணமாக சிரியா, ஈரான் மற்றும் ஏனைய ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து மக்கள் பெருந்தொகையில் வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு வெளியேறும் மக்கள் |ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். ஆயினும் அண்மைக்காலமாக அகதிகளுக்கான தஞ்சக் கோரிக்கையை ஐரோப்பிய நாடுகள் பலவும் நிராகரித்து வந்தனர்.

ACJU - Mslim MPs சந்திப்பின் போது அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை - அஷ்-ஷைக் எம்.மfபாஹிம்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து 2015 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வரவேற்பொன்றை 01.09.2015 செவ்வாய்க் கிழமை ஜம்இய்யாவின் தலைமையகத்தில நடாத்தியது. அந்நிகழ்ச்சியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.
தொகுப்பு: அஷ்-ஷைக் எம்.மபாஹிம்

அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளன் அவன் பெயரால்...
இந்த நிகழ்வுக்கு தலைமைதாங்கும் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்- ஷைக் ரிழ்வி முப்தி அவர்களேஅன்பின் உலமாக்களே முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளே எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளமுஸ்லிம் சகோதரர்களே மற்றும் சபையோர்களே!

Wednesday, September 2, 2015

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு

எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் சென்ற 01.09.2015 மாலை அதன் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக்; றிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


Thursday, August 13, 2015

வசீம் தாஜுதீனின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு அசிற் ஊற்றப்பட்டது - மஹிந்த மகனின் முன்னாள் காதலி



மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜு இன் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு  தொடர்பில் வசீம் தாஜு கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின் தனது நெருங்கிய நண்பியும் அழகுக்கலை நிறுவனம் நடாத்தும்
ஒரு யுவதிக்கு தனது மனக்குமுறலை வெளியிட்டிருந்தாள்.  
இவள் வெளியிட்ட தகவல்கள் வெளியே வந்தவுடன் குறித்த அழகுக்கலை யுவதியும் ரோகிதவின் முன்னாள் காதலியும் நாட்டை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வெளிநாடுகளில் வேறு வேலை  கொடுப்பதாகத் தெரிவித்தே அகற்றப்பட்டனர். தற்போது ரோகிவின் காதலியின் நெருங்கிய நண்பியான குறித்த அழகுக்கலை யுவதி இத்தாலியில் வசிப்பதாகத் தெரியவருகின்றது. அவள் முன்னர் வெளியிட்ட தகவல்களை சிங்கள இணையத்தளம் முழுமையாக வெளிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ரோகிதவின் காதலி தெரிவித்த தகவல்கள் அப்படியே தரப்பட்டுள்ளன.மகிந்தவின் மகன்  ரோகித ஒரு காமக் கொடூரன். அவன் என்னைக் காணும் முன்  நானும் வசீம் தாஜு நல்ல நண்பர்களாக இருந்தோம்.  ரோகித என்னுடன் தொடர்புபட்டபின்  வசீம் தாஜு  என்னை  விட்டு விலகிவிட்டார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். ரோகிதவுடன் நான் தொர்பில் இருந்த போது என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி என்னை  பாலியல்ரீதியில் பெரும் சித்திரவதை செய்தான்.
எனது அந்தரங்கங்களை வெறி கொண்டு  பல தடவை கடித்த போது நான்  அவனது  தொடர்பில் இருந்து விலகத் தொடங்கினேன். ரகர் விளையாட்டில் வசீம் தாஜு  மிகவும் பிரபலமானவர். அத்துடன் ரோகிதவ விடவும் மென்னையான போக்கும் ஆண்மையானவரும் கூட. நகைச்சுவையும் அவருக்கு நன்றாக வரும். ”ரோகித ஒழுங்காக ரகரும் சரியாக விளையாடமாட்டான், பிகரையும் சரியாக கையாளமாட்டான்” என்று எனக்கு சொல்லிச் சிரித்துள்ளான். ரோகித ஒருதடைவை என்னை கட்டாயப்படுத்தி பாலியலுறவு கொண்ட போது இந்த நகைச்சுவையை நான் ரோகிதவுக்கு சொன்ன போது ரோகித கடும் கோபம் கொண்டு என்னைத்  தாக்கினான்.
எனது வயிற்றுப் பகுதியில் தாக்கிய போது நான் மயங்கிவிட்டேன். என்னை அறைக்குள் விட்டுவிட்டு வெளியேறிவிட்டான். அதன் பின்னர் நான் ரோகிதவுடன் கதைக்கவில்லை.அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து நள்ளிரவில் ரோகிதவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அந்த அழைப்பை நான் எடுத்த போது யாரோ அலறுவது கேட்டது. அதன் பின்னர்  என்னுடன் கதைத்த ரோகித ”உன்ர கள்ளக் காதலனுக்கு என்ன நடக்குது என்று கேள்” என கூறிய படி வசீம் தாஜு வை சித்திரவதை செய்யத் தொடங்கினான். ரோகிதவுடன் இன்னும் சிலர் இருப்பது எனக்கு தொலைபேசி சத்தங்கள் ஊடாகப் புரிந்தது.  வசீம் தாஜு க்கு  நடக்கும் சித்திரவதைகளை நேரடி வர்ணனைகள் போல எனக்கு கூறிக் கொண்டிருந்தான் ரோகித.  நான் அலறினேன். வேண்டாம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் ரோகித இன்னும் கொலை வெறியாக இருந்தான். 
 அதன் பின்னர் வசீம் தாஜு  என்னுடன் கதைக்க வைத்தான். அவன் இரு வார்த்தைகள் கதைப்பதற்கு இடையில் அவனது ஆண்குறி அறுக்கப்பட்டதாக ரோகித தெரிவித்த போது தொலைபேசியில் பெரும் அலறல்சத்தம் கேட்டது. அத்துடன்  அந்த உறுப்புக்கு அசிற் ஊற்றுவதாகவும் எனக்குத் தெரிவித்த போது நான் தொலைபேசியை அணைத்துவிட்டு கத்தினேன். அதன் பின்னர் நான் நேரிடையாக  அன்ரிக்கு  (மகிந்தவின் மனைவி )தொலைபேசியில் தொடர்பு எடுத்தேன். ஆனால் என்னுடன்  அவர் தொடர்பு கொள்ளவில்லை. ரோகித மீண்டும் மீண்டும் தொலைபேசியில் எனக்கு தொடர்பு எடுத்த போதும் நான் எடுக்க வில்லை. அதன் பின்னர் எனக்கு ஒரு தகவல் அனுப்பினான். உனது உடம்மை தொட்டு அனுபவித்தவன் தற்போது காருக்குள் கருகிக்கிடக்கிறான் போய்ப் பார்” என்று வந்தது, நான் அப்படியே மயங்கிவிட்டேன். அதன் பின்னர் காலையில் எனது நண்பி  எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து  காருக்குள் சடலம் கிடப்பதாகத் தெரிவித்த போது  துக்கம் தாளாது அழுதேன்.இவ்வாறு தனது நெருங்கிய நண்பிக்கு தெரிவித்துள்ளாள் மகிந்த மகன் ரோகிதவின் முன்னாள் காதலி யசாரா!!
 நன்றி சிங்கள இணையம்.
மொழிபெயர்ப்பு
அல்.றிஸ்வான்

Thursday, March 26, 2015

முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்

சென்ற 24.03.2015 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான நடைபெற்ற கூட்டத்தில் ஜம்இய்யாவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.சீ.அகார் முஹம்மத் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.

இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வரலாறு நெடுகிலும், எமது
தாய் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் அதன்
இறைமையைக் காப்பதற்காகவும் நாட்டின் ஏனைய தலைவர்களுடன்
இணைந்து தமது மகத்தான பங்களிப்பை செய்து வந்துள்ளதோடு, நாட்டின்
வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்கேற்றுள்ளனர்
என்பதை இங்கு பெருமிதத்துடன் நினைவுகூர விரும்புகின்றோம்.

Monday, February 23, 2015

சகல மக்களினதும் பிரதிநிதித்துவத்தை அரசியல் அமைப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் - தேசிய ஷுரா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானம


தேசிய ஷுரா சபையின் மூன்றாது பொதுச் சபைக் கூட்டம் அதன் தலைவர் தாரிக் பதியூதின் மஹ்மூத் தலைமையில் இன்று (22.02.2015) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 06 இல் அமைந்துள்ள எம்.ஐ.சீ.எச். மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பொதுச் சபை அங்கத்தவர்களும் நிறைவேற்றுக் குழு மற்றும் செயலக அங்கத்தினரும் கலந்து கொண்டனர்.