Pages

Thursday, December 14, 2023

இஸ்லாமிய வங்கி முறையின் தோற்றமும் வளர்ச்சியும்

 





சர்வதேச ரீதியாக மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறையாக வங்கித்துறை கானப்படுகிறது. உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளும் இன்று வங்கிகளின் கைகளிலே தங்கியிருக்கின்றன. இவ்வாரு வங்கிகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் பிரதான இடத்தை வகிக்கின்றன.


           பாரம்பரிய வங்கி முறைகள் வட்டியை அடிப்படையாக கொண்டே இயங்குகின்றன. ஆனால் இஸ்லாம் வட்டியை மிக கடுமையாக எதிர்க்கிறது. இந்த வகையில் வட்டி வங்கி முறைக்கு மாற்றீடாக புதிய ஒழுங்குகளை இஸ்லாமிய உலகம் வேண்டி நின்றது. இதன் விளைவாக நடைமுறையில் இருந்த பாரம்பரிய வங்கி முறைகளைகளுக்கு மாற்றீடாக ஷரீஆ அனுமதித்த வர்த்தகங்களும் முகவர் ஒப்பந்தங்களும் நடைமறைபடுத்தக்கூடிய இஸ்லாமிய வங்கிமுறை தோற்றம் பெற்றது.

           இஸ்லாமிய வங்கிகளின் தோற்றத்துக்கான அத்திவாரம் சுமார் 1400 வருடங்கள் பழமையானதாகும். பண்டைய காலத்தில் உலகெங்கும் சென்று வர்த்தகத்தில் ஈடுபட்ட அறேபிய வர்த்தகர்களிடம் பிரயாணம் செய்ய முடியாத அறேபிய மக்கள் தங்களிடமிருந்த சொத்துக்களை பொருட்களாகவும் பணமாகவும் வழங்கி இலாப நட்டத்தில் பங்குபெறல் என்ற அடிப்படையில் பங்காளர்களாக இருந்து தொழில்களில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகின்றது. இவ்வாரான, இஸ்லாமிய வங்கி செயற்பாடுகளை ஒத்த விடயங்கள் நபித்தோழர்கள் காலத்திலும் மிக எளிமையான அமைப்பில் நடைமுறையில் இருந்திருக்கின்றன.

           உமர் (றழி) அவர்களது ஆட்சி காலத்தில் பைத்துல்மால் எனும் பொது நிதியம் பொதுமக்களிடமிருந்து  சேமிப்புக்களை பெற்று அச்சேமிப்புக்களை இலாப நட்டங்களை பகிர்ந்துகொள்ளல் என்ற அடிப்படையில் முதலீடு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேவையெற்படும்போது மக்களுக்கு கடன் வசதிகளை வழங்கி அவர்களது வியாபார நடவடிக்கைகளுக்கு வலுவூட்டியதாகவும் வரலாற்று சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன.

            மேலும், உமர் (றழி) அவர்கள் பைத்துல்மாலுக்கென ஒரு தனியான விசாலமான கட்டிடத்தையும் கட்டினார்கள். பெரும் பாலான பொருளாதார நடவடிக்கைகளுக்கு அது மையமாக காணப்பட்டது. இந்த பைத்துல்மால் நிலையங்களை பற்றி பேராசிரியர் வில்சன் அவர்கள் “அவை இன்றைய மத்திய வங்கி போன்று தொழில்பட்டிருக்கின்றன.” எனக் குறிப்பிடுகிறார். ( Gilbert : The History Principle and Practice of Banking)

                           எனவே இன்றைய இஸ்லாமிய வங்கிகள் மேற்கொள்ளும் பணிகளில் அதிகமான மற்றும் பிரதானமான பணிகளை நபி )ஸல்( அவர்களின் காலத்திலும் கலீபாக்களின் காலத்திலும் வங்கி என்ற நாமம் சூட்டப்படாமல் தனி மனிதர்களும் வர்த்தகர்களும் பைத்துல்மால் எனும் நிறுவனமும் எளிய முறையில் நடைமுறைப்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

                       எவ்வாராயினும், இன்று உள்ளது போன்று இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் நவீன முறையில் அமைந்த இஸ்லாமிய வங்கிகள் 1960 களில் தோற்றம் பெற்றன. அக்காலத்தில் வட்டியை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய வங்கிகளின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வங்கிகளின் தொடர்பின்றி மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது இதற்கு மாற்றீடாக இஸ்லாமிய வறையறைக்குள் இயங்கும் இஸ்லாமிய நிதி நிறுவனங்களின் அவசியத்தை அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் சிந்திக்க துவங்கினர்.   

        அதன் விளைவாக முதலாவது இஸ்லாமிய வங்கி எகிப்தின் மிட்கம்ர் என்ற இடத்தில் தோற்றம் பெற்றது. இவ்வங்கி Mitgumr Saving Association  என்ற பெயரில் 1961–1964 இடைப்பட்ட காலத்தில் தொழிற்பட்டது. பின்னர் 1975 ல் அஷ்ஷேய்க் ஸஈத் அஹ்மத் என்பவரின் முயர்ச்சியினால் துபாயில் ஆரம்பிக்கப்பட்ட துபாய் இஸ்லாமிய வங்கி சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதுவே முதலாவது வெற்றிகரமான இஸ்லாமிய வங்கி என கூறப்படுகிறது. அதன் பின், 1980 களில் இஸ்லாமிய வங்கித்துறை வளர்ச்சியில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.

·         சூடான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தங்களது அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் இஸ்லாமிய ஷரீஆவுக்கு அமைவாக மாற்றிக்கொண்டன.

·         1981 இல் சவூதி அறேபியாவில் இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையமான IRIT (Islamic Research and Training Institution)  என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

·         1983 இல் மலேசியாவில் BIMB வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

·         முதலாவது தகாபுல் நிறுவனம் 1984 இல் மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

          1990 களில் இஸ்லாமிய வங்கி முறையின் வளர்ச்சி ஒரு புதிய பரிணாமத்தை கண்டது. அதாவது பாரம்பரிய வங்கிகள் தங்களது வங்கிகளுக்குள் இஸ்லாமிய வங்கி பிரிவுகளை (Islamic Window)  உருவாக்கி செயற்படுத்த தொடங்கின. மேலும் 1991 இல் இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான சர்வதேச தர நிலைகள் மற்றும் நியமனங்களை வழங்கும் பிரதான நிறுவனமாக AAOIFI (Accounting and Auditing Organization for Islamic Financial Institutions)  என்ற நிறுவனம் பஹ்ரைனில் ஸ்தாபிக்கப்பட்டது. அத்தோடு The Dow Jones என்ற இஸ்லாமிய பங்குச்சந்தை நிறுவனமும் தோற்றம் பெற்றது.

          இவ்வாரு சர்வதேச ரீதியாக வேகமாக வளர்ச்சியடைந்த இஸ்லாமிய வங்கித்துறை 2008 இல் 75 க்கு மேற்பட்ட நாடுகளில் 300 க்கு மேற்பட்ட இஸ்லாமிய நிதி நிறுவனங்களை கொண்டிருந்ததாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்திருந்தது.

          இலங்கையில் 2005 ஆம் ஆண்டு, அதுவரையில் நடைமுறையில் இருந்த 1988 ஆம் ஆண்டைய 30 ஆம் இலக்க வங்கிச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இஸ்லாமிய வங்கி முறை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த திருத்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பின்னர் 2011 இல் அமானா வங்கி முதலாவது இஸ்லாமிய வங்கியாக நாணய சபையால் அங்கீகரக்கப்பட்டது.


         இது தவிர, பாரம்பரிய வங்கிகளின் இஸ்லாமிய பிரிவுகளாக MCB வங்கியின் இஸ்லாமிய பிரிவு, இலங்கை வங்கியின் அந்நூர், கொமர்ஷல் வங்கியின் அல் அதாலா, HNB வங்கியின் அந் நஜாஹ் இன்னும் LOLC அல் பலாஹ், People Leasing அஸ்ஸபா, LB Finance அஸ் ஸலாமா, கொழும்பில் செயற்பட்டு வரும் First Baraka,  அழுத்கம நகரில் இயங்கும் Aluthgama Investment Fund,  அக்குரணையில் இயங்கும் Islamic Services Society,  மாவனல்லையில் இயங்கும் Crescent Islamic Financial Services Ltd போன்ற இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. இவ்வாரு இஸ்லாமிய வங்கிகள் உலகம் முழுவதும் வேகமாக பரந்து விரிவடைந்து செல்கின்றன.  

https://mnmazinimani.blogspot.com/2017/08/blog-post.html 

Wednesday, December 14, 2016

ACJU அவகாசம் கேட்டதால் சலீம் மர்சூபின் அறிக்கை மீண்டும் தாமதம்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் உயர் நீதி­மன்ற  முன்னாள் நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான குழு மேற் கொண்­டுள்ள சிபா­ரி­சு­களை மேலும் ஆராய்­வ­தற்கு உலமா சபை கால அவ­காசம் கோரி­யதால் சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்­பான இறு­தி­ய­றிக்கை எதிர்­வரும் ஜன­வரி 29 ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக குழுவின் தலைவர் உயர் நீதி­மன்ற முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்துள்ளார்.

Thursday, December 8, 2016

கம்பளை ஸம் ஸம் தயாரிப்பாளருக்கு 2016 ஆம் ஆண்டுக்கான மூன்று நட்சத்திர விருது

மத்திய மாகாண சிறந்த தொழில் முனைவோர்களுக்கு அங்கீகரிக்கும் ஸ்டார் விருது விழா கண்டி ஓக் ரே ஹோட்டல் இல் கடந்த 29.11.2016 அன்று நடைப்பெற்றது  இவ்விழாவில்  கம்பளை ZAM ZAM பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனம்  இவ்வாண்டுக்கான சிறிய அளவிலான உற்பத்தி துறை வகையில் மூன்று நட்சத்திர விருதினை பெற்றுக் கொண்டது. அதனை நிறுவனத்தின் உரிமையாளர் சம்சுதீன் முகமட் சலீம் பெற்றுக்கொண்டார்.

2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்நிறுவனம் தற்போது 5 வகையான உற்பத்பத்திப் பொருட்களுடன் யோகட், ஜெலி யோகட், யோகட் பாணம், தயிர், ஐஸ் பக்கெட் என பல தயாரிப்புக்களுடன்  மத்திய மாகாணத்தில்  ஓர்  சிறந்த பால் உற்பத்தி நிறுவனமாக வளர்ந்து வருகின்றமை குறிப்பிடட்தக்கது. மேலும் ஹலாலான மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் இவ்வுற்பத்திப் பொருட்களுக்கு HAC நிறுவனத்தினால் ஹலால் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்;நிறுவனம் கடந்த 2014/2015 ஆம் ஆண்டுகளிலும் நட்சத்திர விருதினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



பொப் பாடகர் தாஈயாக மாறினார் - ஜுனைத் ஜெம்ஷித் - அல்லாஹ்வின் பாதையில் செல்லும் வழியில் அவரும் மனைவியும் மரணம்


Image result for junaid jamshed and tariq jameel
Image result for junaid jamshed and tariq jameelபாஸ்தானின் பிரபல பாடகர் Junaid Jamshedஇசையும்,கூத்தும்,குடியும், கும்மாலமும்,ஆட்டமும் என தனது வாழ்கையை ஓட்டியவர். உலகெங்கும் உள்ள உருது மொழிபேசும் இடமெல்லாம் சென்று ஆடிப்பாடி அனைவரையும் மகிழ்வித்து உலக இன்பங்களில் மூழ்கி இருந்தவர். ஆனாலும் அவரது மணவாழ்கையில் சந்தோஷம் இருக்கவில்லை. எப்போது பார்தாலும் மனைவியுடன் கருத்துவேற்றுமை,சண்டை சச்சரவு....ஒருநாள்...மனைவியுடன் சண்டையிட்டுகொண்டு வீட்டில் இருந்து கிழம்புகிறார்.... பொடி நடையாக.....எதிரே உள்ள மஸ்ஜிதில் இமாம் Maulana Tariq Jameel செய்யும் பயான் காதில் விழுகிறது.... "உங்கள் மனைவியர்களுடன் கருத்து வேற்றுமை இல்லாமல் இருக்க...ஒன்றாக ஒரே பாத்திரத்தில் உணவருந்துங்கள். ஒருவருக்கொருவர் அடிக்கடி ஊட்டி விடுங்கள். இந்தக்காரியத்தை நீங்கள் தொடராக செய்வீர்கள் எனில் உங்களிருவரிடையே உள்ள வேற்றுமைகள் நீங்கும். அன்பு பெருகும். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசம்கொள்ள ஆரம்பிப்பீர்கள்." இதனை தன்காதால் செவியுற்ற Junaid Jamshed... மீண்டும் வீடு திரும்புகிறார். மனைவியை சாப்பிட வருமாறு அழைக்கிறார். என்றும் இல்லாத இந்த புதினமான அழைப்பைக் கண்டு மனைவி திகைக்கிறார். சந்தோஷமாக உணவுகளை எடுத்துவைக்கிறார். ஆளுக்கொரு தட்டை அவர் எடுத்துவைக்க....இவரோ ஒருதட்டை கவிழ்த்து வைத்துவிட்டு மறுதட்டில் மட்டும் இருவருக்கான உணவை எடுத்துகொண்டு "நாம் இன்று ஒரு தட்டில் சாப்பிடுவோம்"எங்கிறார்....மனைவியும் சம்மதிக்க.. இருவரும்....சாப்பிடுகிறனர். இந்த செயல் சில நாள் தொடர்கிறது. வீட்டில் சண்டை சச்சரவுகள் ஒழிந்து அமைதி நிலவ ஆரம்பிக்கிறது. இருவரிடையே அன்பு பெருக ஆரம்பிக்கிறது. இந்த ஒரு செயலே இவ்வளவு மாற்றத்தை தந்தால் இஸ்லாத்தை நான் கடைப்பிடித்தால் எவ்வளவு நலவுகள் உருவாகும் என அவா கொள்கிறார்.தான் செவியுற்ற பயானின் சொந்தக்காரரிடம் சென்று விடையத்தை கூறிட அவரும் Maulana Tariq Jameel ஆலோசனை செய்கிறார் .காலமும் நேரமும் தீனுக்காக செலவாகிட அவர் இசையை வெறுக்கிறார். தான் தன் தொழிலை விடப்போவதாக ஆலோசனை கேட்கிறார். ஆனால் தொழிலை விடாமல் தீனுடைய நலவுக்காக அந்தத்தொழிலை பயன்படுத்துமாறு ஆலோசனை கொடுக்கப்படுகிறது. பின்னர் துன்யாவை,மதுவை,மாதுவை புகழ்ந்து பாடிய அதே குரல் தீனை,படைத்தவனை,அவன் நிஃமத்களை,அவனது தூதர்களை புகழ்ந்துபாடும் குரலாக மாறுகிறது.தீனையும் முழுமையாக அவர் படித்து முடித்தார். உலகெங்கும் சென்று பல்லாயிரக்கணக்கன இளைஞர்களை தீன் பக்கம் திருப்ப கலிமாவை மொழியவைக்க...தீனுல் இஸ்லாத்தில் நுழையவைக்க தன் ஆயுள் முழுக்க செலவிட்டு நேற்று(7.12.2016) அன்று திடீர் விபத்தின் மூலம் ஷஹீதானார், அல்லாஹ்விடமே திரும்பி இருக்கிறார். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர் வழிகாட்டுகிறான்??? அந்த நேர்வழியின்பால் செலுத்தவைத்து அவர்களை இறுதிவரை தீனிலே இஸ்திகாமத்தாக வைத்திருந்து தான் விரும்பிய நேரத்தில் அழைத்தும் கொள்கிறான். மிக்க மேலானவன் அவரை பொருந்திக்கொள்வானாக. அவரது நற்பணிகளுக்கு மிக்க மேலான சன்மானங்களை பரிசளித்து தன் ரஹ்மத்தின் நிழலை கொடுத்தருள்வானாக.

Thursday, September 10, 2015

சவூதி மன்னரின் விருந்தினர்களாக ஹஜ் கடமையினை நிறைவேற்றுபவர்கள் விபரம்:

Saudi-Haj-6சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு புனிதஸ்தலங்களின் சேவகரான அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு சூஊதின் விருந்தினர்களாக 2015ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு 20 இலங்கையர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பயணத்திற்கான பயணச்சீட்டுக்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொறுப்பதிகாரி மம்துஹ் முஹம்மது அலி அல்லாப் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

Monday, September 7, 2015

பாணந்துரை நோலிமிட்டை எரித்தது கோட்டா - ராவய ஆசிரியர் அதிர்ச்சித் தகவல்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்தைத் தத்தெடுங்கள் : போப் பிரான்சிஸ்

1.12-720x480
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப்  பிரான்சிஸ்அகதிகளை தத்தெடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல், வன்முறைகள் மற்றும் வறுமை நிலை காரணமாக சிரியா, ஈரான் மற்றும் ஏனைய ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து மக்கள் பெருந்தொகையில் வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு வெளியேறும் மக்கள் |ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். ஆயினும் அண்மைக்காலமாக அகதிகளுக்கான தஞ்சக் கோரிக்கையை ஐரோப்பிய நாடுகள் பலவும் நிராகரித்து வந்தனர்.

ACJU - Mslim MPs சந்திப்பின் போது அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை - அஷ்-ஷைக் எம்.மfபாஹிம்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து 2015 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வரவேற்பொன்றை 01.09.2015 செவ்வாய்க் கிழமை ஜம்இய்யாவின் தலைமையகத்தில நடாத்தியது. அந்நிகழ்ச்சியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.
தொகுப்பு: அஷ்-ஷைக் எம்.மபாஹிம்

அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளன் அவன் பெயரால்...
இந்த நிகழ்வுக்கு தலைமைதாங்கும் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்- ஷைக் ரிழ்வி முப்தி அவர்களேஅன்பின் உலமாக்களே முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளே எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளமுஸ்லிம் சகோதரர்களே மற்றும் சபையோர்களே!

Wednesday, September 2, 2015

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு

எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் சென்ற 01.09.2015 மாலை அதன் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக்; றிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


Thursday, August 13, 2015

வசீம் தாஜுதீனின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு அசிற் ஊற்றப்பட்டது - மஹிந்த மகனின் முன்னாள் காதலி



மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜு இன் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு  தொடர்பில் வசீம் தாஜு கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின் தனது நெருங்கிய நண்பியும் அழகுக்கலை நிறுவனம் நடாத்தும்
ஒரு யுவதிக்கு தனது மனக்குமுறலை வெளியிட்டிருந்தாள்.  
இவள் வெளியிட்ட தகவல்கள் வெளியே வந்தவுடன் குறித்த அழகுக்கலை யுவதியும் ரோகிதவின் முன்னாள் காதலியும் நாட்டை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வெளிநாடுகளில் வேறு வேலை  கொடுப்பதாகத் தெரிவித்தே அகற்றப்பட்டனர். தற்போது ரோகிவின் காதலியின் நெருங்கிய நண்பியான குறித்த அழகுக்கலை யுவதி இத்தாலியில் வசிப்பதாகத் தெரியவருகின்றது. அவள் முன்னர் வெளியிட்ட தகவல்களை சிங்கள இணையத்தளம் முழுமையாக வெளிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ரோகிதவின் காதலி தெரிவித்த தகவல்கள் அப்படியே தரப்பட்டுள்ளன.மகிந்தவின் மகன்  ரோகித ஒரு காமக் கொடூரன். அவன் என்னைக் காணும் முன்  நானும் வசீம் தாஜு நல்ல நண்பர்களாக இருந்தோம்.  ரோகித என்னுடன் தொடர்புபட்டபின்  வசீம் தாஜு  என்னை  விட்டு விலகிவிட்டார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். ரோகிதவுடன் நான் தொர்பில் இருந்த போது என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி என்னை  பாலியல்ரீதியில் பெரும் சித்திரவதை செய்தான்.
எனது அந்தரங்கங்களை வெறி கொண்டு  பல தடவை கடித்த போது நான்  அவனது  தொடர்பில் இருந்து விலகத் தொடங்கினேன். ரகர் விளையாட்டில் வசீம் தாஜு  மிகவும் பிரபலமானவர். அத்துடன் ரோகிதவ விடவும் மென்னையான போக்கும் ஆண்மையானவரும் கூட. நகைச்சுவையும் அவருக்கு நன்றாக வரும். ”ரோகித ஒழுங்காக ரகரும் சரியாக விளையாடமாட்டான், பிகரையும் சரியாக கையாளமாட்டான்” என்று எனக்கு சொல்லிச் சிரித்துள்ளான். ரோகித ஒருதடைவை என்னை கட்டாயப்படுத்தி பாலியலுறவு கொண்ட போது இந்த நகைச்சுவையை நான் ரோகிதவுக்கு சொன்ன போது ரோகித கடும் கோபம் கொண்டு என்னைத்  தாக்கினான்.
எனது வயிற்றுப் பகுதியில் தாக்கிய போது நான் மயங்கிவிட்டேன். என்னை அறைக்குள் விட்டுவிட்டு வெளியேறிவிட்டான். அதன் பின்னர் நான் ரோகிதவுடன் கதைக்கவில்லை.அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து நள்ளிரவில் ரோகிதவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அந்த அழைப்பை நான் எடுத்த போது யாரோ அலறுவது கேட்டது. அதன் பின்னர்  என்னுடன் கதைத்த ரோகித ”உன்ர கள்ளக் காதலனுக்கு என்ன நடக்குது என்று கேள்” என கூறிய படி வசீம் தாஜு வை சித்திரவதை செய்யத் தொடங்கினான். ரோகிதவுடன் இன்னும் சிலர் இருப்பது எனக்கு தொலைபேசி சத்தங்கள் ஊடாகப் புரிந்தது.  வசீம் தாஜு க்கு  நடக்கும் சித்திரவதைகளை நேரடி வர்ணனைகள் போல எனக்கு கூறிக் கொண்டிருந்தான் ரோகித.  நான் அலறினேன். வேண்டாம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் ரோகித இன்னும் கொலை வெறியாக இருந்தான். 
 அதன் பின்னர் வசீம் தாஜு  என்னுடன் கதைக்க வைத்தான். அவன் இரு வார்த்தைகள் கதைப்பதற்கு இடையில் அவனது ஆண்குறி அறுக்கப்பட்டதாக ரோகித தெரிவித்த போது தொலைபேசியில் பெரும் அலறல்சத்தம் கேட்டது. அத்துடன்  அந்த உறுப்புக்கு அசிற் ஊற்றுவதாகவும் எனக்குத் தெரிவித்த போது நான் தொலைபேசியை அணைத்துவிட்டு கத்தினேன். அதன் பின்னர் நான் நேரிடையாக  அன்ரிக்கு  (மகிந்தவின் மனைவி )தொலைபேசியில் தொடர்பு எடுத்தேன். ஆனால் என்னுடன்  அவர் தொடர்பு கொள்ளவில்லை. ரோகித மீண்டும் மீண்டும் தொலைபேசியில் எனக்கு தொடர்பு எடுத்த போதும் நான் எடுக்க வில்லை. அதன் பின்னர் எனக்கு ஒரு தகவல் அனுப்பினான். உனது உடம்மை தொட்டு அனுபவித்தவன் தற்போது காருக்குள் கருகிக்கிடக்கிறான் போய்ப் பார்” என்று வந்தது, நான் அப்படியே மயங்கிவிட்டேன். அதன் பின்னர் காலையில் எனது நண்பி  எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து  காருக்குள் சடலம் கிடப்பதாகத் தெரிவித்த போது  துக்கம் தாளாது அழுதேன்.இவ்வாறு தனது நெருங்கிய நண்பிக்கு தெரிவித்துள்ளாள் மகிந்த மகன் ரோகிதவின் முன்னாள் காதலி யசாரா!!
 நன்றி சிங்கள இணையம்.
மொழிபெயர்ப்பு
அல்.றிஸ்வான்

Thursday, March 26, 2015

முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்

சென்ற 24.03.2015 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான நடைபெற்ற கூட்டத்தில் ஜம்இய்யாவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.சீ.அகார் முஹம்மத் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.

இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வரலாறு நெடுகிலும், எமது
தாய் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் அதன்
இறைமையைக் காப்பதற்காகவும் நாட்டின் ஏனைய தலைவர்களுடன்
இணைந்து தமது மகத்தான பங்களிப்பை செய்து வந்துள்ளதோடு, நாட்டின்
வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்கேற்றுள்ளனர்
என்பதை இங்கு பெருமிதத்துடன் நினைவுகூர விரும்புகின்றோம்.