Pages

Thursday, July 31, 2014

இலங்கையில் இஸ்லாத்தின் எதிரிகளின் நடவடிக்கைகள் தொடருகிறது! ஆரம்பமாகும் புதிய திட்டம்

இலங்கையில் இஸ்லாத்தின் எதிரிகளின் நடவடிக்கைகள் தொடருகிறது! ஆரம்பமாகும் புதிய திட்டம்

சென்ற 28-7-2014 அன்று சுவர்ணவரினி தொலைக் காட்சியில் பர்தாவைக் கொச்சைப்படுத்தும் ஒரு காட்சி ஒலிபரப்பப்பட்டுள்ளது. அதனைக் கன்டிக்காமல் இப்படியே விட்டால் தொடர்ந்தும் இவர்கனிள் அக்கிரமத்தை தொடரமல்லவா???

YOUTUBE

மகிந்தவின் அரசியலுக்கு சவக்குழியை தோண்டுகிறார் கோத்தபாய - விக்டர் ஐவன்

தனது சகோதரரான ஜனாதிபதிக்கு மாத்திரமல்லாது அவரது அரசாங்கத்தின் அரசியலுக்கும் சவக்குழியை தோண்டும் நிலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மாறியுள்ளதாக ராவய பத்திரிகையின் ஆசிரிய ஆலோசகர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் இராணுவ நிழலானது வடக்கு கிழக்கு மக்கள் மீது மாத்திரமல்லாது முழு நாட்டிலும் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தனது அன்புக்குரிய தம்பி விரும்பியதைச் செய்வதற்கு இடமளித்துள்ள கொள்கையானது முழு நாட்டிலும் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் சில அடிப்படைவாத சக்திகளை பாலூட்டி வளர்த்து விட்டதுடன் நின்று விடாமல், அவற்றிற்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளார். இதற்கு பொதுபல சேனா சிறந்த உதராணமாகும்.

அரசாங்கத்துக்குள் பெரும் பிளவு !! பிரபல சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் புதிய கட்சி ஆரம்பிக்கின்றார்

upfa 2அரசாங்கத்திற்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர், புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளார். இந்த கட்சிக்கு முதல் முன்னணி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அரசியல் கட்சிக்கு உத்தியோகப் பற்றற்ற அடிப்படையில் தலைமை தாங்க குறித்த பிரபல அமைச்சர் இணங்கியுள்ளார்.
ஜே.வி.பி.யின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், பாணந்துறை மேயருமான நந்தன குணதிலக்க, முன்னாள் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினருமான அசல ஜாகொட இந்த புதிய கட்சியை அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tuesday, July 29, 2014

ஜனாதிபதி மகிந்தர் கட்சிக்கு பிளவு! கிளர்ச்சிக்குழு உதயம்

ஆளும் கட்சிக்குள் கிளர்ச்சிக் குழுவொன்று உதயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த கிளர்ச்சிக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்து வரவதாகக் குறிப்பிடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இந்தக் கிளர்ச்சிக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சிக்காக நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர்கள் ஓரம் கட்டப்பட்டு, புதியவர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக சிரேஸ்ட உறுப்பினர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறெனினும், இந்த கிளர்ச்சிக்குழு பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் பங்களிப்புச் செய்யுமா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

ஜனாதிபதி ராஜபக்சே விமானம் தரையிறங்க கனடா அனுமதி மறுப்பு

ராஜபக்சே விமானம் தரையிறங்க கனடா அனுமதி மறுப்பு

டொரண்டோ, ஜூலை. 29–
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் அவரது விமானத்துக்கு பெட்ரோல் (எரிபொருள்) தேவைப்பட்டது. அதற்காக கனடாவில் தரை இறங்க அனுமதி கோரப்பட்டது.

ஆனால் அவரது விமானம் கனடாவில் தரை இறங்க அனுமதி தர அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. எனவே அவர் பயணம் செய்த விமானத்துக்கு அங்கு பெட்ரோல் நிரப்பப்பட வில்லை. இந்த தகவலை லங்காஸ்ரீ ரேடியோவின் ஆய்வாளர் சுதர்மா தெரிவித்தார்.

கனடா அரசின் அதிகார பூர்வமான குழு சமீபத்தில் இலங்கை சென்றது. அக் குழுவை இலங்கை வெளி விவகார மந்திரி ஜி.எல். பெரீஸ் அவமதித்து அனுப்பியதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இலங்கை அதிபரின் விமானம் தரை இறங்க கனடா அரசு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இறுதி கட்ட போரின் போது இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது. அது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றியுள்ளது. அதற்கு கனடாவும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.maalaimalar.com/

Thursday, July 24, 2014

பிறை பார்ப்பது பற்றிய தெளிவு


Explanation on Hilaal sighting by Ash-Shaikh Abdul Wahhaab, Coordinator, Hilaal Division - All Ceylon Jamiyyathul Ulama.

பிறை பார்ப்பது பற்றிய தெளிவு - அஷ்-ஷைக் அப்துல் வாஹ்ஹாப் அல்-ஹுமைதி, இணைப்பாளர், பிறைக் குழு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Click here...

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக,

இவ்வருட ஷவ்வால் தலைப்பிறை பார்க்கும் நாள் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகும். நாட்டில் பல பகுதிகளிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்துள்ள உப பிறைக் குழுக்களோடு சகலரும் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்து, அத்தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையினூடாக பொது அறிவித்தல் செய்யப்படும். அவ்வுத்தியோகப் பூர்வ அறிவித்தல் வெளிவரும் வரை வழமையான வணக்கங்களில் ஈடுபடுமாறு சகல முஸ்லிம்கள் வேண்டப்படுகிறார்கள்.

Wednesday, July 23, 2014

இதத்தான் எதிர்ப்பார்த்தார்கள்: சந்திரிக்கா, ரணில், ஷிராணி பண்டாரநாயக்க நாளை ஒரே மேடையில் !!

ranil_chandrika
எதிர்க்கட்சித் தலைவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு மேடையில் சந்திக்க உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஆகியோருடன் முன்னாள் ஜனாதிபதி நாளைய தினம் ஒரே மேடையில் தோன்றவுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஏன் ஒழிக்க வேண்டும் ? என்ற தலைப்பில் கொழும்பு நகர மண்டபத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் கருத்தரங்களில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கருத்தரங்கில் கலந்து கொள்வதாக இவர்கள் அனைவரும் அறிவித்துள்ளனர் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன தெரிவித்தார்.
இவர்களை தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய உட்பட அதன் உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
முதலில் இந்த கருத்தரங்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படவிருந்ததுடன் இறுதி நேரத்தில் அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இந்த கருத்தரங்கில் முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார். http://puttalamtoday.com/

Monday, July 21, 2014

காஸாவில் போராளிகளுக்கு உதவ ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு!


தோஹா: இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் முஜாஹிதுகளுக்கு முடிந்த அளவு உதவுமாறு உலக முஸ்லிம்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர் அவையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரரீதியாகவோ, மனிதநேய பணிகள் மூலமாகவோ அல்லது ரமலானின் கடைசிப் பத்துகளில் பிரார்த்தனைகளின் மூலமாகவோ காஸ்ஸா மக்களின் வெற்றிக்காக முயற்சிக்கவேண்டும் என்று கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

’சியோனிஸ்டுகளுக்கு உதவும் அரபு மற்றும் அரபு அல்லாத நாடுகள், மேற்கத்திய சக்திகளின் வெற்றிக்கொடி உயர அனுமதிக்காதே’ என்று கர்ளாவி அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்துள்ளார். காஸ்ஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை மெளனமாக பார்த்துக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டது என்று கர்ளாவி உலக முஸ்லிம்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
http://meesanmirror.blogspot.com/

Sunday, July 20, 2014

இலங்கைக்கு எரிபொருள் விற்பனை ; ஈரான் மறுப்பு

iraa
இலங்கைக்கு எரிபொருள்  விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை ஈரான் நிராகரித்துள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு ஈரான் எண்ணெய் வழங்கவில்லை என தேசிய ஈரான் எண்ணெய் நிறுவன வௌிவிவகார அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை மாற்று வழிகளைப் பயன்படுத்தி ஈரானிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாக வெளியான செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
ஈரானிடமிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்ளாது வேறு மூன்றாம் நாடொன்றின் ஊடாக இலங்கை ஈரானிய எரிபொருட்களை இறக்குமதி செய்வதாக செய்தி வெளியானது.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மூன்றாம் நாடொன்றிடமிருந்து இலங்கை எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  http://dailyceylon.com/

ஹமாஸின் தலைவர் உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு…!!

hamas-leader-khaled-meshaal-கைபர்-
ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும் குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள்.
“ஹமாஸ்” காஸாவின் நிலங்களை மட்டுமல்ல அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வருபவர். இஸ்ரேலின் சின்-பெட் பல முறை இவரை படுகொலை செய்ய முயன்றும் இறைவன் அருளால் இன்றும் அதன் தலைமமையை கொண்டு செல்பவர்.
உலக முஸ்லிம் உம்மாவிற்கு அதன் இணையத்தளம் ஊடாக ஹமாஸ் சார்பாக அவர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.
“ஓஹ்….. எமது உலக முஸ்லிம் சகோதர்களே..!! எங்களிற்கு இங்க என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எமது மண்ணை யூத இராணுவம் மீண்டும் ஒரு முறை விழுங்க முற்பட்டுள்ளது. அவர்களிற்கு எதிரான எமது போராட்டம் இதுவரை நடந்ததையும் விட எழுச்சியுடனும் பல அர்ப்பணங்களிற்கு மத்தியிலும் இடம்பெற்று வருகிறது. யஹுதிகள் இப்போது ஒரு புதிய எதிரியுடன் மோதுகிறார்கள்.
ஆம் நாம் அவர்களிற்கு எதிராக பல எதிர்பாராத தாக்குதல் முறைகளையும் சண்டைகளையும் ஆரம்பித்துள்ளோம். இதனை நான் பெருமையுடனும் சந்தோசத்துடனும் இந்த புனிித ரமாழானில் உங்களிற்கு சொல்லிக்கொள்கிறேன்”.
“உலகம் முழுதும் முஜாஹித்கள் போராடுகிறார்கள். அதற்காக தங்கள் உயிர்களை இறைவனின் பாதையில் இழக்கிறார்கள். அது போன்றே காஸாவிலும் புனித யுத்தம் நடக்கிறது. நீங்கள் இந்த சண்டைகளில் பங்கேற்க அவாவுற்றிருப்பீர்கள்.
உங்கள் உளமார்ந்த இந்த எண்ணத்தை ஹமாஸின் சார்பில் பாரட்டுகிறேன். ஆனால் எமக்கு உங்கள் ஆட்பலம் தேவையில்லை. தாராளமாக எமது போராளிகள் அதற்காக திரண்டுள்ளார்கள். எமக்கு ஆயுதங்களும் தேவையில்லை. யஹுதிகளை எதிர்கொள்ளும் மனப்பலம் எம்மிடம் உண்டு. அதுவே எமது பிரதான ஆயுதம். ஆயுத தளவாடங்கள் எம்மிடம் கையிறுப்பில் உள்ளன. அவற்றை காஸாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.”
“ஓ… எம் அன்பின் முஸ்லிம் சகோதரர்களே..!! எமக்கு மருந்துகள் தேவை. காயப்படும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் காப்பாற்ற அவை தேவைப்படுகின்றன. மேலும் வைத்தியர்கள் தேவை. யஹுதிகள் வீசும் குண்டுகள் அபாயகரமானவை. அவை எமது உடன் பிறப்புக்களை படுகாயப்படுத்துகின்றன. எமது குழந்தைகளிற்கு பால்மா தேவை. இந்த ரமழானில் நீங்கள் இவற்றை எமக்கு வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மட்டும் எடுங்கள். மற்றவற்றை எமது எல்-கஸ்ஸாம் பார்த்துக்கொள்ளும்.”
“ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும்இ குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள்.
யாரெல்லாம் ஸியோனிஸ்ட்களால் கொல்லப்பட்டார்களோ அவர்களிற்கு பிர்தவ்ஸ் எனும் ஜன்னத் கிடைக்க துஆ செய்யுங்கள். எமது ஆன்மீக தலைவரும் ஹமாஸின் தந்தையுமான சேய்ஹ் அஹ்மத் யாஸீன் (ரஹ்) அவர்கள் எம்மை எல்லாக் கருமங்களிலும் துஆவை கொண்டு ஆரம்பித்து துஆவை கொண்டு முடிக்கும் படி அடிக்கடி பணிப்பார்கள்.
அவர்கள் காட்டிய பாதையில் தான் நாம் பயணிக்கின்றோம். ஒ… முஸ்லிம் உம்மாவே உங்கள் துஆக்களை விட பெரிய ஆயுதம் கஸ்ஸாமிடம் இல்லை. அவற்றை நீங்கள் எங்களிற்காக வழங்குங்கள். ஆமீன். யஹுதியின் அழிவு இதில் இருந்தே ஆரம்பிக்கும் ……”. http://kattankudi.info/

ISIS : தொடரும் மர்மமும் வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும்… !!

68a3e09e7deee36b65ca4f2f546adc44_XL
Al-Badhdadi

சிரியா, ஈராக் போன்ற நாடுகளின் பல முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றி, வேகமாக முன்னேறிக்கொண்டு வந்த ISIS தாம் கைப்பற்றியுள்ள இடங்களில் கிலாபாத்தை அறிவித்திருந்தது.

ஆனாலும் ISIS பற்றிய மர்மம் இன்னும் நீங்காத புதிராகவே இருக்கின்றது. அவர்களிடம் காணப்படும் பெருந்தொகை ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் எங்கிருந்து கிடைக்கப்பெற்றன போன்ற கேள்விகள் பதில் இல்லாமலேயே இருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் ISIS பற்றிய ஒரு திடுக்கிடும் தகவலை அமெரிக்க புலனாய்வுப்பிரிவில் பணிபுரிந்து, பின்பு அதன் இரகசியங்களை வெளியிட்ட குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் எட்வர்ட் ஸ்நோடன் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க, பிரித்தானிய, மற்றும் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளினால் இணைந்து உருவாக்கப்பட்டதே இந்த ISIS என அவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை ஸ்நோடன் The Intercept என்ற இணையதளத்திற்கு வழங்கியதாக குவைத்தில் இருந்து வெளியாகும் பிரபல இஸ்லாமிய சஞ்சிகையான “அல் முஜ்தமா” அதன் இணையதளத்தில் பிரசுரித்திள்ளது.
உலகம் பூராகவும் காணப்படும் முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும் முகமாகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், இத்திட்டத்திற்கு “குளவிக்கூடு” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலை பாதுகாப்பதே பிரதான குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் இஸ்ரேலுக்கு அண்மையில் உள்ள ஒரு நாட்டில் ஒரு அமைப்பை உருவாக்கி, ஆனால் அந்த அமைப்பின் தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளுக்கே மேற்கொள்ளப்ப்படுமாறு  அமைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலீபாவாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள “அல் பக்தாதி” இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாடிடம் ஒரு வருடம் இராணுவ, பேச்சு போன்ற பயிற்சிகளை ஒரு வருடமாக பெற்றுக்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://techislam.com/?p=236

Saturday, July 19, 2014

பண்பாடுகள் இல்லாத தஃவா உயிரற்ற பிணத்தை போல - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

hajjul-akbar
சத்தியத்தை கொண்டு அசத்தியத்தை எதிர்க்க வேண்டும், தன்னிடம் உள்ள சத்தியத்தை கொண்டு மனிதர்களை தாக்குவது இஸ்லாமிய அடிப்படைகளுக்கே முரணானது. பண்பாடுகள் இல்லாத தஃவா உயிரற்ற பிணத்தை போல என்பதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாரில்லையேல் சத்தியத்தை கரைத்து குடித்திருந்தாலும் இவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கோ இஸ்லாத்திற்கோ எந்த பிரயோஜனமும் இல்லை.

Friday, July 18, 2014

யார் இந்த யூதர்கள் ? - றிழ்வான்

Friday, 18 July 2014 12:08 // 

    யார் இந்த யூதர்கள்?
    யூதர்களை அறிந்து கொள்ளூங்கள்!! யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அல்லாஹுத் தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான்.
    இது எதைக் காட்டுகிறது  எனில் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.

    பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண தரப் பெறுபேற்றை வெளியிட முடியுமா? – சோசலிஸ மாணவர்கள் சவால்

    Screen Shot 2014-07-17 at 3.19.57 PM
    நாட்டில் பொருளாதார, கல்விப் பிரச்சினைகள் உக்கிரமடையும் போது அதற்கு முகம்கொடுக்க முடியாத அரசு பல்கலைகழக மாணவர் இயக்கங்களை தடைசெய்கிறது என சோசலிஸ மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் டாக்டர். நலிந்த ஜயதிஸ்ச தெரிவித்தார்.
    இன்று காலை மக்கள் விடுதலை முன்னனியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
    அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்:
    1983 ஆம் ஆண்டில் ஜே.ஆர், ஜயவர்தன மாணவர் இயக்கங்களைத் தடை செய்து ஆரம்பித்து போன்று தற்பொழுது நடைபெறுவதும் மிகவும் பயங்கரமானது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நியமித்திருக்கும் ஒருவரே எஸ்.பீ. திசாநாயக. அவரை நாம் குறைகூறி பலனில்லை, அவர் ராஜபக்ஷ அரசின் உடன்படிக்கை முன்னெடுத்து வருகிறார். இந்த அரசுக்கு தேவையான நேரத்தில் செயற்படும் உடன்படிக்கை குழுக்கள் பல இருக்கின்றது. நாட்டு மக்களை சிரிக்க வைக்க மேவின் சில்லாவை பயன்படுத்துவார்கள், நாட்டில் இனக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் ஞானசார தேரரை பயன்படுத்துவார்கள். அதேபோன்றுதான் பல்கலைகழக மாணவர் இயக்கங்களை தடை செய்ய, அதனை இல்லாதொழிக்க எஸ்.பீ. திசாநாயகவை பயன்படுத்துகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
    இதேவேளை பாராளுமன்ற  உறுப்பினர்களின் சாதாரண தர பரிட்சை பெறுபேர்களை முடியுமானால் வெளியிடுமாறும் அவர் அரசாங்கத்திடம் சவால் விட்டார்.
    இந்த அரசாங்கத்துக்கு கல்வி முக்கியமில்லை, அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கோ, அரசியல் விடயங்களுக்கோ கல்வி முக்கியமில்லை, கேசினோ சூதாட்டத்தில் ஈடுபடும், விபச்சாரங்களில் ஈடுபடும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பணிவிடை செய்யும் தொழிலாளர்களே அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஆ|ஸ)

    100 குடும்ப உறுப்பினர்கள். 3 மனைவி 36 குழந்தைகள் 4-வது மனைவி தேடும் நபர்

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிட மாக உள்ளது. அங்கு  மறைந் திருக்கும் தீவிரவாதிகளை ணுவம் குண்டு வீசி அழிக்கிறது. எனவே அங்கு தங்கியிருக்கும் மக்கள் பென்னு என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்.

    இந்த மக்களில் குல்ஷர்கானும் ஒருவர் இவரது குடுமபத்தில் மொத்தம் 100 உறுப்பினர்கள். குல்ஷார்கான் (வயது 54). இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். 3 மனைவிகளுக்கும் மொத்தம் 36 குழந்தைகள் உள்ளனர். இருந்தும் அவருக்கு இல் வாழ்க்கையில் திருப்தி இல்லை என வருத்தப்படு கிறார். இன்னும் அதிக குழந் தைகள் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கு அவரது மனைவிகள் ஒத்துழைக்கவில்லை. நாங்கள் குழந்தை பெறும் மெஷின் அல்ல என்று கூறி மறுத்து விட்டனர். மேலும் அவரை தங்கள் பக்கம் இப்போது நெருங்க விடுவது இல்லை

    இதனால் தனது வாழ்க் கையில் குல்ஷார் கான் பெரும் விரக்தி அடைந்து விட்டார். இஸ்லாமிய பெண்ணை 4-வது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அதற்கான பெண் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.குஷ்ஷார் கான் தனது 3 மனைவிகள் மற்றும் 36 குழந்தைகளுடன் ஷாவா என்ற இடத்தில் இருந்து பன்னுவுக்கு குடிபெயர இருக்கிறார்.

    அவர் மனைவி, குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் உட்பட சுமார் 100 குடும்ப உறுப்பினர்களுடன் சாவா பகுதியில் 35 அறைகள் கொண்ட வீட்டில் வசித்து வந்தார்.குல்ஷார்கான் 1976 ஆம் ஆண்டுமுதல் 1992 வரை 16 வருடங்கள் துபாயில் டாக்சி டிரைவராக பணியாற்றி உள்ளார். இவரது 2 மகன்கள் தர்போது துபாயில் டிரைவராக பணீபுரிந்து வருகிறார்கள்.

    குல்ஷார் கானுக்கு முதன் முறையாக 17 வய தில் திருமணம் நடந்தது. அப்து வயது உறவுக்கார பெண்ணை மணந்தார். அவர் களுக்கு 8 மகள்கள், 4 மகன் கள் உள்ளனர். 8 ஆண்டு களுக்கு பிறகு 17 வயது பெணையும், அதை தொடர்ந்து மற்றொரு பெணையும் மணந்து குழந்தைகளை பெற்றார். தற்போ 4-து திருமணத்துக்கு தயாராகி வருகிறார்.

    மோடி அரசின் மதரஸா நவீனமயமாக்குதல் திட்டம்: முஸ்லிம்கள் கவலை!!

    மோடி அரசின் மதரஸா நவீனமயமாக்குதல் திட்டம்: முஸ்லிம்கள் கவலை!!புதுடெல்லி: மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் மதரஸா நவீனமயமாக்குதல் திட்டம் குறித்து முஸ்லிம்கள் கவலையடைந்துள்ளனர்.மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் மதரஸா நவீனமயப்படுத்துதல் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
    பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் மதரஸாக்களை நவீனமயமாக்குவது முக்கிய வாக்குறுதியாக இடம் பெற்றிருந்தது. சிறுபான்மை கல்வி நிலையங்கள் மற்றும் கல்வியிலும் நவீன சீர்திருத்தங்களும், கல்வி முறையில் முக்கிய மாற்றங்களும் கொண்டு வரப்படும் என்பதை தேர்தலின்போது பா.ஜ.க தெரிவித்திருந்தது. 
    ஆனால், மதரஸா நவீனப்படுத்துதல் என்ற பெயரில் மதரஸாக்களை நிர்வகிப்பது மற்றும் பாடத்திட்டங்களில் தலையிடுவதற்கான முயற்சிக்கள் நடக்கும் என்ற கவலை முஸ்லிம்களிடம் எழுந்துள்ளது.