Pages

Friday, July 18, 2014

பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண தரப் பெறுபேற்றை வெளியிட முடியுமா? – சோசலிஸ மாணவர்கள் சவால்

Screen Shot 2014-07-17 at 3.19.57 PM
நாட்டில் பொருளாதார, கல்விப் பிரச்சினைகள் உக்கிரமடையும் போது அதற்கு முகம்கொடுக்க முடியாத அரசு பல்கலைகழக மாணவர் இயக்கங்களை தடைசெய்கிறது என சோசலிஸ மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் டாக்டர். நலிந்த ஜயதிஸ்ச தெரிவித்தார்.
இன்று காலை மக்கள் விடுதலை முன்னனியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்:
1983 ஆம் ஆண்டில் ஜே.ஆர், ஜயவர்தன மாணவர் இயக்கங்களைத் தடை செய்து ஆரம்பித்து போன்று தற்பொழுது நடைபெறுவதும் மிகவும் பயங்கரமானது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நியமித்திருக்கும் ஒருவரே எஸ்.பீ. திசாநாயக. அவரை நாம் குறைகூறி பலனில்லை, அவர் ராஜபக்ஷ அரசின் உடன்படிக்கை முன்னெடுத்து வருகிறார். இந்த அரசுக்கு தேவையான நேரத்தில் செயற்படும் உடன்படிக்கை குழுக்கள் பல இருக்கின்றது. நாட்டு மக்களை சிரிக்க வைக்க மேவின் சில்லாவை பயன்படுத்துவார்கள், நாட்டில் இனக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் ஞானசார தேரரை பயன்படுத்துவார்கள். அதேபோன்றுதான் பல்கலைகழக மாணவர் இயக்கங்களை தடை செய்ய, அதனை இல்லாதொழிக்க எஸ்.பீ. திசாநாயகவை பயன்படுத்துகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற  உறுப்பினர்களின் சாதாரண தர பரிட்சை பெறுபேர்களை முடியுமானால் வெளியிடுமாறும் அவர் அரசாங்கத்திடம் சவால் விட்டார்.
இந்த அரசாங்கத்துக்கு கல்வி முக்கியமில்லை, அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கோ, அரசியல் விடயங்களுக்கோ கல்வி முக்கியமில்லை, கேசினோ சூதாட்டத்தில் ஈடுபடும், விபச்சாரங்களில் ஈடுபடும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பணிவிடை செய்யும் தொழிலாளர்களே அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஆ|ஸ)

No comments:

Post a Comment