Pages

Sunday, July 20, 2014

இலங்கைக்கு எரிபொருள் விற்பனை ; ஈரான் மறுப்பு

iraa
இலங்கைக்கு எரிபொருள்  விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை ஈரான் நிராகரித்துள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு ஈரான் எண்ணெய் வழங்கவில்லை என தேசிய ஈரான் எண்ணெய் நிறுவன வௌிவிவகார அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை மாற்று வழிகளைப் பயன்படுத்தி ஈரானிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாக வெளியான செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
ஈரானிடமிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்ளாது வேறு மூன்றாம் நாடொன்றின் ஊடாக இலங்கை ஈரானிய எரிபொருட்களை இறக்குமதி செய்வதாக செய்தி வெளியானது.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மூன்றாம் நாடொன்றிடமிருந்து இலங்கை எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  http://dailyceylon.com/

No comments:

Post a Comment