Pages

Friday, July 18, 2014

மோடி அரசின் மதரஸா நவீனமயமாக்குதல் திட்டம்: முஸ்லிம்கள் கவலை!!

மோடி அரசின் மதரஸா நவீனமயமாக்குதல் திட்டம்: முஸ்லிம்கள் கவலை!!புதுடெல்லி: மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் மதரஸா நவீனமயமாக்குதல் திட்டம் குறித்து முஸ்லிம்கள் கவலையடைந்துள்ளனர்.மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் மதரஸா நவீனமயப்படுத்துதல் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் மதரஸாக்களை நவீனமயமாக்குவது முக்கிய வாக்குறுதியாக இடம் பெற்றிருந்தது. சிறுபான்மை கல்வி நிலையங்கள் மற்றும் கல்வியிலும் நவீன சீர்திருத்தங்களும், கல்வி முறையில் முக்கிய மாற்றங்களும் கொண்டு வரப்படும் என்பதை தேர்தலின்போது பா.ஜ.க தெரிவித்திருந்தது. 
ஆனால், மதரஸா நவீனப்படுத்துதல் என்ற பெயரில் மதரஸாக்களை நிர்வகிப்பது மற்றும் பாடத்திட்டங்களில் தலையிடுவதற்கான முயற்சிக்கள் நடக்கும் என்ற கவலை முஸ்லிம்களிடம் எழுந்துள்ளது.

மதரஸா நவீனமயமாக்குவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுச் செய்திருப்பது நல்ல துவக்கம் என்று லக்னோ ஈத்கா இமாம் மவ்லானா காலித் ராஷித் ஃபிராங்கி தெரிவித்தார். ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கல்விக் கொள்கையை தெளிவுப்படுத்தவேண்டும். மதரீதியான பாடத்திட்டத்தில் தலையிட அனுமதிக்கமாட்டோம். பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் சாத்தியமில்லை. மதரஸாவை நவீனப்படுத்துவது அத்தியாவசியம். அதற்காக சில கம்ப்யூட்டர்களை நிறுவதுடன் முடிந்துவிடக்கூடாது’ என்று காலித் ராஷித் மேலும் தெரிவித்தார். 
மதரஸா நிர்வாகத்தில் அரசு தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய நிர்வாக குழு உறுப்பினர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார்.’அரசின் புதிய நடவடிக்கையின் பின்னணியில் உந்துசக்தி எது? என்பதை சமுதாயம் கண்காணிக்கிறது.மதரஸா நவீனப்படுத்தும் திட்டத்தின் மூலம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மதரஸா சம்பிரதாயத்தில் தலையிட முயன்றதையும் எதிர்த்திருந்தோம்’ என்று ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார். 
இதுகுறித்து வக்ஃப் பச்சாவோ தஹ்ரீக் தலைவர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் கூறியதாவது:
நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது மத்திய அரசின் சிறுபான்மை நிதிகளும், கல்வி ஸ்காலர்ஷிப்புகளும் உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை.இந்நிலையில் தற்போது மதரஸாக்களை நவீனப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடுச் செய்திருப்பதை, மதரஸா நிர்வாகத்தில் தலையிடும் முயற்சியாகவே காணவேண்டியுள்ளது என்றார். 
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மதரஸா நவீனமாக்கள் திட்டத்தின் மூலம் பல காரியங்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தது. ஆனால், அரசு மானியம் பெறும் மதரஸாக்கள் மட்டுமே அதன் மூலம் பலனடைந்தன. மதரஸா பாடத்திட்டத்தில் விஞ்ஞானம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களையும் உட்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டப்படி மதரஸா ஆசிரியர்களுக்கு பயிற்சி, சோதனைக் கூட வசதி, நூலக புத்தகங்கள் ஆகியன மதரஸாக்களுக்கு கிடைத்தன.மதரஸாக்களை நேசனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலுடன் இணைத்து 5,8,10,12 வகுப்புகளில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான திட்டங்களும் அடங்கியிருந்தன.
- See more at: http://www.thoothuonline.com/archives/67589#sthash.OJT0qf5A.fQvOrUK7.dpuf

No comments:

Post a Comment