Pages

Wednesday, July 23, 2014

இதத்தான் எதிர்ப்பார்த்தார்கள்: சந்திரிக்கா, ரணில், ஷிராணி பண்டாரநாயக்க நாளை ஒரே மேடையில் !!

ranil_chandrika
எதிர்க்கட்சித் தலைவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு மேடையில் சந்திக்க உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஆகியோருடன் முன்னாள் ஜனாதிபதி நாளைய தினம் ஒரே மேடையில் தோன்றவுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஏன் ஒழிக்க வேண்டும் ? என்ற தலைப்பில் கொழும்பு நகர மண்டபத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் கருத்தரங்களில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கருத்தரங்கில் கலந்து கொள்வதாக இவர்கள் அனைவரும் அறிவித்துள்ளனர் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன தெரிவித்தார்.
இவர்களை தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய உட்பட அதன் உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
முதலில் இந்த கருத்தரங்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படவிருந்ததுடன் இறுதி நேரத்தில் அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இந்த கருத்தரங்கில் முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார். http://puttalamtoday.com/

No comments:

Post a Comment