Al-Badhdadi |
சிரியா, ஈராக் போன்ற நாடுகளின் பல முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றி, வேகமாக முன்னேறிக்கொண்டு வந்த ISIS தாம் கைப்பற்றியுள்ள இடங்களில் கிலாபாத்தை அறிவித்திருந்தது.
ஆனாலும் ISIS பற்றிய மர்மம் இன்னும் நீங்காத புதிராகவே இருக்கின்றது. அவர்களிடம் காணப்படும் பெருந்தொகை ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் எங்கிருந்து கிடைக்கப்பெற்றன போன்ற கேள்விகள் பதில் இல்லாமலேயே இருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் ISIS பற்றிய ஒரு திடுக்கிடும் தகவலை அமெரிக்க புலனாய்வுப்பிரிவில் பணிபுரிந்து, பின்பு அதன் இரகசியங்களை வெளியிட்ட குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் எட்வர்ட் ஸ்நோடன் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க, பிரித்தானிய, மற்றும் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளினால் இணைந்து உருவாக்கப்பட்டதே இந்த ISIS என அவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை ஸ்நோடன் The Intercept என்ற இணையதளத்திற்கு வழங்கியதாக குவைத்தில் இருந்து வெளியாகும் பிரபல இஸ்லாமிய சஞ்சிகையான “அல் முஜ்தமா” அதன் இணையதளத்தில் பிரசுரித்திள்ளது.
உலகம் பூராகவும் காணப்படும் முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும் முகமாகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், இத்திட்டத்திற்கு “குளவிக்கூடு” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலை பாதுகாப்பதே பிரதான குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் இஸ்ரேலுக்கு அண்மையில் உள்ள ஒரு நாட்டில் ஒரு அமைப்பை உருவாக்கி, ஆனால் அந்த அமைப்பின் தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளுக்கே மேற்கொள்ளப்ப்படுமாறு அமைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலீபாவாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள “அல் பக்தாதி” இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாடிடம் ஒரு வருடம் இராணுவ, பேச்சு போன்ற பயிற்சிகளை ஒரு வருடமாக பெற்றுக்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://techislam.com/?p=236
No comments:
Post a Comment