இவ்வருட ஷவ்வால் தலைப்பிறை பார்க்கும் நாள் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகும். நாட்டில் பல பகுதிகளிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்துள்ள உப பிறைக் குழுக்களோடு சகலரும் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்து, அத்தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையினூடாக பொது அறிவித்தல் செய்யப்படும். அவ்வுத்தியோகப் பூர்வ அறிவித்தல் வெளிவரும் வரை வழமையான வணக்கங்களில் ஈடுபடுமாறு சகல முஸ்லிம்கள் வேண்டப்படுகிறார்கள்.
பிறைத் தீர்மானம், உத்தியோகப் பூர்வமாக தேசிய வானொலியின் மூலமே அறிவிக்கப்படும் என்பதையும் ஏனைய தகவல் ஊடகங்களான குருஞ்செய்தி (ளுஆளு)இ வறவைவநசஇ கயஉநடிழழம முதலியன மூலம் வெளிவரும் தகவல்களுக்கு தலைப் பிறையைத் தீர்மானிக்கும் அமைப்பான கொழும்பு பெரியபள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் போன்றன எவ்விதத்திலும் பொறுப்பில்லை என்பதையும் அவ்வமைப்பு அறிவித்துக் கொள்கிறது.
அஷ்-ஷைக் ஏ.டப்லிவ்.எம். ரியாழ்
பிறைக்குழு தலைவர்
கொழும்பு பெரிய பள்ளிவாசல்
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
பிறைக்குழு செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
எம்.எச்.எம். ஸமீல்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
No comments:
Post a Comment