ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர், புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளார். இந்த கட்சிக்கு முதல் முன்னணி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அரசியல் கட்சிக்கு உத்தியோகப் பற்றற்ற அடிப்படையில் தலைமை தாங்க குறித்த பிரபல அமைச்சர் இணங்கியுள்ளார்.
ஜே.வி.பி.யின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், பாணந்துறை மேயருமான நந்தன குணதிலக்க, முன்னாள் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினருமான அசல ஜாகொட இந்த புதிய கட்சியை அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மிகவும் இரகசியமான முறையில் கட்சி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கட்சியை விட்டு விலகிய விலகும் வகையில் செயற்பட்டு வரும் அரசியல்வாதிகளை அணுகி அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் முதல் சுவரொட்டி சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கட்சியை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சிக்குள் இருந்து புதிய கட்சி உதயம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ள சிலர் இணைந்து முதலாம் முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை ஒன்றை உருவாக்கியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் அங்கும் வகிக்கும் ஒரு முக்கிய பிரமுகர் தலைமையில் இந்த புதிய கட்சி இயங்குவதாக கூறப்படுகிறது.
பாணந்துறை நகர சபையின் தலைவர் நந்தன குணதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட ஆகியோர் இந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தெரியவந்துள்ளது.
ஏனைய கட்சிகளில் இருந்து ஆளும் கட்சியில் இணைந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இணைந்து இந்த கட்சியை ஆரம்பித்துள்ளதுடன் அது இரகசியமான முறையில் இயங்கி வருகிறது.
மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளின் கவனம் செலுத்தும் வெகுஜன அமைப்பாக இந்த கட்சி செயற்பட உள்ளது.
புதிய அரசியல் கட்சி எதிர்காலத்தில் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படும் எனவும் பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கட்சி பதிவு செய்யப்படும் என புதிய கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்படும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துள்ளார்.
இருளை எதிர்க்கும் உங்களுக்கு என எழுதப்பட்ட சுவரொட்டிகள் அண்மையில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததுடன் அந்த சுவரொட்டியில் முதலாம் முன்னணி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. http://puttalamtoday.com/
No comments:
Post a Comment